வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன?

Capsicum Hair Growth Healthy Food Recipes Heart Attack
By Manchu Apr 25, 2022 06:00 PM GMT
Manchu

Manchu

Report

குடமிளகாய் உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தபடுகிறது. இது காய்கறிகளுக்கு சுவை மற்றும் மணம் தரும் வண்ணமயமான காயாகும்.

குடமிளகாய் சோலனேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் கிடைக்கிறது.

காரம் அதிகமில்லாத இவை, மிளகாயின் மணமும், மிளகிற்கு நிகரான சுவையும் உடையது.

பச்சை குடைமிளகாய்

நாம் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்துவது இந்த பச்சை வண்ண குடமிளகாயைத் தான். அதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன என்று இங்கு பார்க்கலாம்.

தொகுப்பாளினி பிரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 

எடையை குறைக்கும்

குடைமிளகாயில் குறைந்த அளவே கலோரியும் கொழுப்பும் உள்ளது. இதை சாப்பிடுவதால் எடை அதிகரிக்காது.

நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது.

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil

புற்றுநோய்

புற்றுநோயானது மிகவும் ஆபத்தான நோய்களில் ஒன்றாகும், ஆரம்ப காலங்களில் கண்டறியப்பட்டால் மட்டுமே சிகிச்சையளிக்கப்பட முடியும். இது முதலில் ஒரு கட்டி போன்றே தொடங்குகிறது.

இறுதியில் செல்கள் ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் பெருகுகிறது. குடமிளகாயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடெண்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு தன்மை புற்று நோய் வராமல் தடுக்கிறது.

தினமும் குடமிளகாயை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீர்ப்பை, கணையம், கருப்பை வாய், புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கலாம்.

உடல் வலி

குடமிளகாயில் அழற்சி எதிர்ப்பு தன்மை இருப்பதால் உடல் வலிக்கு மிகவும் ஏற்றது. எலும்பு இணைப்புகளில், மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தையும், வலியையும் குறைக்கிறது.

இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான வலிகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும். இது மிகச் சிறந்த வலி நிவாரணி ஆகும்.

இதய நோய், புற்றுநோயிலிருந்து தப்பிக்க வேண்டுமா? உருளைக்கிழங்கு செய்யும் அற்புதம் 

அழகை அதிகரிக்கும்

தோல்தான் நம் உடலில் வெளியில் தெரியும் மிக முக்கியமான உறுப்பு. இன்றைய மாசுபட்ட, தீங்கு நிறைந்த சுற்றுச் சூழலில் வாழும் நாம் நமது தோலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

வைட்டமின் C மற்றும் வைட்டமின் E அதிகம் உள்ள குடமிளகாய் நம் தோலுக்கு தேவையான சத்துகளை தந்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. தோலில் ஏற்படும் சுருக்கத்தை போக்கி வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.

செல்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தி தோலுக்கு உறுதியளிக்கிறது. குடமிளகாயை பசை போல் செய்து 10-15 நிமிடங்கள் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மீது தடவினால் அவை நீங்கி முகம் பொலிவு பெறும்.

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil

முடி வளர்ச்சிக்கு

குடமிளகாயில் உள்ள சத்துக்கள் தலை முடியின் வேரை வலிமையாக்கி, தலை முடியை ஆரோக்கியமாக வைக்கிறது.

இதை உபயோகித்ததால் பொடுகுத் தொல்லை அறவே ஒழியும். இது மண்டை ஒட்டிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து முடியையும், மண்டை ஓட்டையும் ஆரோக்கியமான வைக்கிறது.

குடமிளகாய் எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. இதை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

பாதி குடமிளகாயை ஆலிவ் எண்ணையில் ஊற வைத்து மூன்று நாட்கள் கழித்து வடிகட்டி உபயோகிக்கலாம்.

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆபத்தை விளைவிக்குமா வாழைப்பழம்? அவசியம் தெரிஞ்சிக்கோங்க 

செரிமானத்திற்கு உதவும்

அஜீரணம் என்பது பலரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான பிரச்சினையாகும். குடமிளகாய் செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது வாய்வு தொல்லையை போக்கி மலச்சிக்கலை தடுக்கிறது.

இதை சாலட் செய்து சாப்பிடும் முன் உணவில் சேர்த்துக்கொண்டால், இரைப்பையில் சுரக்கும் ஜீரண நீரை தூண்டி செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

இதயத்திற்கு நல்லது

அதிகப்படியான கொழுப்பும், உயர் ரத்த அழுத்தமுமே மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்கள். இதய நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது ரத்த ஓட்டம் தடைபடுகிறது.

குடமிளகாயில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. இதில் கெட்ட கொழுப்பு இல்லை. அதனால் இதயத்தை ஆரோக்கியமாகவும், அதிக செயல் திறனுடனும் வைத்துக் கொள்கிறது.

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil

வயிறு பிரச்சிக்கைக்கு தீர்வு

உறுப்புகளின் உட்புற சுவர்களில் ஏற்படும் உடைப்பு, அந்த குறிப்பிட்ட உறுப்பை செயல்பட விடாமல் செய்யும். இவை வலியையும் ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்தும். இதை நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் அது புற்று நோயாக மாறும் அபாயம் உண்டு.

குடமிளகாயில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் C அதிகமாக உள்ளது. இவை இரண்டும் குடற்புண் வராமல் காப்பதில் பெரும் பங்காற்றுகிறது. குடமிளகாய், மிளகு இரண்டையும் பயன்படுத்துவது குடற்புண்ணுக்கு மிகவும் நல்லது.

தினமும் கேரட் சாப்பிட்டால் என்ன நடக்கும்? வாய்பிளக்க வைக்கும் நன்மைகள் 

மஞ்சள் குடமிளகாயின் நன்மைகள்

மஞ்சள் குடமிளகாயில் வைட்டமின் C அபரிமிதமான அளவு உள்ளது. இதை சாலட், சூப் மற்றும் பிற உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். இதை பச்சையாக சாப்பிட்டால் சிறிது கசப்பாக இருக்கும்.

மஞ்சள் குடமிளகாயை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் ஆஸ்துமா போன்ற சுவாச சம்பந்தமான கோளாறுகளை நீக்கும். சளி தொந்தரவுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

இதயத்தை பாதுகாக்கும். நரம்பியல் கோளாறுகளை சரி செய்து ஆரோக்கியமாக இயங்கச் செய்யும்.

குடமிளகாயில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளதால், நம் உடலில் உள்ள நீர்ச்சத்தை சமன் செய்யும். நம் தசைகளை வலுப்பெறச் செய்யும். சுவாசக் கோளாறுகளை சரி செய்யும்.

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil

குடமிளகாய் பொரியல்

தேவையான பொருட்கள்:

குடமிளகாய் - 200 கிராம் ,

தக்காளி - 100 கிராம்,

பச்சை மிளகாய் - 2,

உப்பு - தேவையான அளவு,

சிவப்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்,

மஞ்சள் - அரை தேக்கரண்டி,

சீரகம் - 1 தேக்கரண்டி,

எண்ணெய் - 4 தேக்கரண்டி

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil

பச்சை மிளகாயை தினமும் உணவில் சேர்ப்பதால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா? 

செயல்முறை:

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மிளகாய் சேர்த்து அதன் நிறம் மாறும் வரை காத்திருக்கவும்.

மஞ்சள் தூள், சீரகம், சிவப்பு மிளகாய்த்தூள் சேர்த்த பின்பு நறுக்கப்பட்ட குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

நறுக்கப்பட்ட தக்காளி மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு, காரம் தேவை எனில், சிறிது மிளகாய் பொடி சேர்க்கவும்.

சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, எண்ணெய் பிரிய ஆரம்பித்தவுடன், குடமிளகாய் பொரியல் தயார்.

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil

குடமிளகாயின் பக்க விளைவுகள்

எந்த உணவாக இருந்தாலும் அதன் பக்க விளைவுகளையும் அறிந்து கொள்வது மிகவும் நல்லது. குடமிளகாய் எடுத்து கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகளை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து ஒருவர் மரணம், மனைவி படுகாயம் 

ரத்தம் நீர்த்துப்போதல்

குடமிளகாய் ரத்தத்தை நீர்க்க செய்து விடும். இது அறுவை சிகிச்சையின் போது பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். அளவுக்கதிகமாக குடமிளகாய் சேர்த்துக் கொள்வது, அறுவை சிகிச்சையின் போது அதிக ரத்த போக்கை ஏற்படுத்தி விடும்.

திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே குடமிளகாய் சேர்த்து கொள்வதை நிறுத்தி விட வேண்டும். இதனால் ரத்தத்தின் நிலைத்தன்மை பாதுகாக்கப்பட்டு, ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படும்.

குழந்தைகளுக்கு கெடுதல்

குடமிளகாய் குழந்தைகளின் மிருதுவான சருமம் மீது பட்டால் எரிச்சல், தடிப்பு, சருமம் சிவப்பாதல், அலர்ஜி போன்றவை ஏற்படும்.

குழந்தைகளுக்கு குடமிளகாய் சேர்க்காமல் இருப்பதே நல்லது. மூன்று வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அளவாக கொடுத்தால் பாதிப்பு ஏற்படாது.

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil  

பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடக்கூடாது

அதிக அளவில் பாலூட்டும் தாய்மார்கள் எடுத்துக் கொண்டால், தீங்கினை விளைவிக்கும்.

சிவப்பு மிளகாய் மற்றும் மிளகில் இருக்கும் அளவே இதிலும் காரத் தன்மை இருப்பதால், அதிகமாக எடுத்துக் கொண்டால் தாய்ப்பாலின் சுவையும், மணமும் மாறி விடும். இதனை பாலூட்டும் தாய்மார்கள் மனதில் கொள்ள வேண்டும்.

முகத்தை பளிங்கு மாதிரி வைத்து கொள்ள வேண்டுமா? கொத்தமல்லியை இப்படி பயன்படுத்துங்க 

வயிற்றுக் கோளாறு

அதிகப்படியான குடமிளகாய் சாப்பிடும் போது வயிற்று கோளாறுகளை ஏற்படுத்தும். அடிக்கடி மலம் நீர்த்து போகும். எந்த காரசாரமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் சூடு அதிகமாகி இது போன்ற கோளாறுகள் ஏற்படும்.

குடமிளகாய் ஏற்படுத்தும் அலர்ஜி

எரிச்சல், தோலில் சிவப்பு திட்டுகள், அதிகமான தும்மல், அரிப்பு போன்றவை அல்ர்ஜியின் அறிகுறிகள். விதை இருக்கும் காய்களினால் கூட அலர்ஜி வரும்.

குடமிளகாய் சிறிய விதைகள் கொண்ட காயாக இருப்பதால் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். தினசரி குடமிளகாய் உணவில் சேர்த்து கொள்ள திட்டமிடுவதற்கு முன், நமக்கு அதனால் அலர்ஜி ஏற்படுமா என்று சோதனை செய்து கொள்வது நல்லது.

இவ்வாறு சில பக்க விளைவுகள் ஏற்பட்டாலும், குடமிளகாயால் நிறைய நற்பலன்களும் உள்ளது என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எந்த உணவாக இருந்தாலும் அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து என்பதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். 

வாழ்நாள் முழுவதும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் குடமிளகாய்! இதன் பக்கவிளைவுகள் என்ன? | Capsicum Benefits In Tamil

தூங்குவதற்கு அரைமணி நேரம் முன் சூடான பால் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா? 

7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US