செல்போன் இல்லாமல் சாப்பிட முடியாத அவலம்... 11ம் வகுப்பு மாணவனின் பகீர் காணொளி
தூத்துக்குடியில் 11ம் வகுப்பு மாணவன் செல்போன் இல்லாமல் சாப்பிட முடியாத அவலநிலைக்கு சென்றுள்ள காட்சி வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனால் நேர்ந்த அவலம்
தூத்துக்குடி மாவட்டத்தில் திருமண நிகழ்வில் சாப்பாடு நடக்கும் இடத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் கலங்க வைத்துள்ளது.
இன்றைய உலகில் குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்துவிட்டு அவர்களை கெடுத்து தவறான வழிக்கு செல்வதற்கு பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர்.
சாப்பிடும் போது, உறங்கும் போது, அழுதாலோ எதற்கு எடுத்தாலும் குழந்தைகளுக்கு செல்போன் தான் தீர்வாக அமைகின்றது. ஆனால் இந்த தவறை பெற்றோர்கள் செய்தால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை தெளிவாக விளக்கியுள்ள இக்காட்சி...
ஆம் தூத்துக்குடி மாவட்டத்தில் திருமண நிகழ்வில் பாட்டி ஒருவர் தனது பேரனுடன் சாப்பிட அமர்ந்துள்ளார். இரண்டு இலைகளிலும் சாப்பாடு உள்ள நிலையில், பேரன் தானாக சாப்பிடாமல் பாட்டி ஊட்டிவிடவே சாப்பாடை சாப்பிட்டுள்ளார்.
ஆனால் கையில் இருந்த செல்போனை மட்டும் கீழே வைக்காமல் சாப்பிட, தொடர்ந்து பாட்டியும் ஊட்டிவிடுகின்றனர். எதிரே அமர்ந்தவர்கள் இதனை காணொளியாக எடுத்ததுடன், அவரிடம் சென்று தயக்கத்துடன் விசாரித்துள்ளனர்.
அதற்கு பாட்டி கூறிய காரியம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் குறித்த மாணவனால் சாப்பிடும் போது செல்போன் இல்லையென்றால் சாப்பிட முடியாதாம். குறித்த தகவலை நம்மால் நம்பமுடியவில்லை என்றாலும் இதுதான் உண்மை என்று கூறப்படுகின்றது... கண்கலங்க வைக்கும் காணொளி இதோ...
கோவையை சேர்ந்த பிளஸ் டூ மாணவன்
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 11, 2023
மொபைல் இல்லாமல் சாப்பிட மாட்டானாம்
தூத்துக்குடியில் நடந்த திருமண நிகழ்வில் கண்டது
வேதனையாக இருக்கிறது pic.twitter.com/PaPxIxZTlX
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |