கேன்ஸ் திரைப்பட விழாவில் இளம்பெண்ணால் பரபரப்பு சம்பவம்
பிரான்ஸ் நாட்டில் 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இவ் விழாவுக்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் உக்ரேனிய தேசியக் கொடி நிறத்தில் உடையணிந்து வந்த பெண் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
image - daily mail
அதாவது, உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் உக்ரேனிய தேசியக்கொடி நிறத்தில் உடையணிந்து ரெட் கார்ப்பெட்டில் வந்த பெண் ஒருவர், திடீரென தனது உடைக்குள் மறைத்து வைத்திருந்த ரத்த நிறத்தில் உள்ள திரவமொன்றை உடலில் ஊற்ற ஆரம்பித்துள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நடந்துகொண்ட அந்தப் பெண்ணை காவலாளிகள் உடனடியாக வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
image - the telegraph