இந்த அறிகுறிகள் இருந்தால் அசால்ட்டா எடுத்துக்காதீங்க.. புற்றுநோய் ஆபத்து நிச்சயம்
உலகளவில் இதயம் சார்ந்த பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அதே சமயம், எமது சமூகத்தில் உள்ள ஆண்களில் 5 பேர்களில் ஒருவருக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உயிரை பறிக்கும் கொடி நோய்களின் தாக்கம் நாளுக்கு நாள் ஆண்களிடையே அதிகரித்து வருகின்றன.
மேலும் பெண்களை விட ஆண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகின்றது. ஆண்களுக்கு இணையாக தற்போது பெண்களும் புகைபிடித்தல், மது அருந்துதல் ஆகிய பழக்கங்களில் ஈடுபடுகிறார்கள்.
புற்றுநோய் வருவதற்கு சில அறிகுறிகள் உள்ளன. இதனை ஆரம்ப காலங்களில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை கொடுத்தால் நிரந்தரமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் கட்டுபடுத்தலாம்.
அந்த வகையில் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள் என்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோய் அபாயத்திற்கான அறிகுறிகள்
1. திடீரென்று சிறுநீர் கழிக்கும் பொழுது அல்லது மலம் கழிக்கும் பொழுது வலி ஏற்படுவது போன்று உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். ஏனெனின் இப்படி ஏற்படும் வலி சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பாக கூட இருக்கலாம்.
2. தொண்டை அல்லது நெஞ்சு பகுதியில் கடுமையான எரிச்சல் இருந்தால் அலட்சியமாக விட்டு விடக்கூடாது. மாறாக நீண்ட நாட்கள் தொடருமாக இருந்தால் உணவுக்குழாய், தொண்டை அல்லது வயிறு தொடர்பான புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
3. புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பழக்கங்களினால் வாய் தொடர்பான புற்றுநோய் ஏற்படலாம். அதுவும் குறிப்பாக வாயில் வெள்ளை நிற திட்டுகள் அல்லது நாக்கில் வெள்ளை நிற திட்டுகள், வாய் புண், நாக்கில் புண், உதடுகள் மற்றும் கன்னங்களில் காயங்கள் இருப்பின் அது கூட புற்றுநோயின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. சில காயங்கள் ஏற்பட்டு இரத்தக்கசிவு, உணர்வின்மை ஏற்படும், அந்த சமயங்களில் உரிய சிகிச்சை பெறுவது நல்லது.
4. பொதுவாக வயது அதிகரிக்கும் போது உடலில் ஏகப்பட்ட மாற்றங்களை பார்க்கலாம். நன்றாக இருந்த ஒருவர் எந்தவித காரணமும் இல்லாமல் திடீரென எடை குறைகிறார் என்றால் இது குறித்து சந்தோஷப்படாமல் மருத்துவரை நாடுவது சிறந்தது. ஏனெனின் இது உடல் எடை இழப்பு புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
5. பொதுவாக உடலின் எந்த பகுதியிலாவது கட்டிகள் இருப்பது போன்று உணர்ந்தால், அதற்கான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். ஏனெனின் கட்டிகள் தானே என சாதாரணமாக விட்டு விட்டால் அது காலப்போக்கில் புற்றுநோயாக மாறலாம்.
6. ஆண்களின் உடலில் வரும் கட்டிகள் கவனிக்காமல் விட்டால் அது டெஸ்டிகுலர் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். எனவே ஆண்கள் வயது அதிகரிக்கும் போது கூடுதல் கவனம் எடுப்பது நல்லது. புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்ப காலங்களில் கண்டறிந்தால் உயிர் ஆபத்தில் இருந்து தப்பிக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |