முடி நீளமாக, அடர்த்தியாக வளரணுமா? அப்போ வெந்தயத்தை வாரம் ஒருமுறை இப்படி Use பண்ணுங்க
பொதுவாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி பளபளப்பான மற்றும் வலுவான கூந்தல் வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இதனை இலகுவில் பெறுவதற்காக விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களை தலைக்கு பயன்படுத்துவார்கள்.
அதே சமயம், ஆரோக்கியமான உணவு பழக்கமும் கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மன அழுத்தம் மற்றும் சூழல் மாசுபாடு உள்ளிட்ட காரணங்களால் கூட தலைமுடி உதிர்வு அதிகமாகலாம். எப்போதும் உடல், உள ரீதியாக ஆரோக்கியமாக இருக்க முயற்சிக்கவும்.
அந்த வகையில், தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் வெந்தய Hair mask தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
வெந்தய Hair mask
தேவையான பொருட்கள்
- தேங்காய் பால் - 2 தேக்கரண்டி
- கற்றாழையின் ஜெல்- 3 தேக்கரண்டி
- மருதாணி பொடி - 1 தேக்கரண்டி
- வெந்தய பொடி - 3 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெந்தய பொடி, தேங்காய் பால் மற்றும் கற்றாழை ஜெல் ஆகிய மூன்றையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல் கலந்துக் கொள்ளவும்.
பின்னர் மருதாணிப்பொடியை வேண்டுமென்றால் கலந்துக் கொள்ளலாம்.
தலைமுடியை லேசாக நனைத்து விட்டு பேக்கை போடவும்.
தலைமுடியில் தடவி, 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
இறுதியாக வெதுவெதுப்பான நீரில் அலசினால் தலைமுடி உதிர்வு குறைந்து காடு போல் முடி வளர ஆரம்பிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |