இரவில் நல்லா தூங்க வேண்டுமா? பாலில் இதை மட்டும் சேர்த்துக்கோங்க
மஞ்சள் பாலை தினமும் குடித்து வந்தால் என்னென்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சமையலறையில் அனைத்து உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களில் ஒன்று தான் மஞ்சள் தூள் ஆகும். எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ள மஞ்சள் தூள் உடம்பில் பல பிரச்சனைகளை குறைக்கின்றது.
இதனை பாலுடன் கலந்து குடித்தால் இன்னும் அதிகமான பலனைப் பெறலாம். மஞ்சள் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பாகவும் செயல்படுகிறது.
அதே சமயம் கால்சியம், புரதம் மற்றும் பல வைட்டமின்கள் பாலில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் பாலின் நன்மைகள்
இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் நிம்மதியாக தூங்குவதற்கு ஒரு டம்ளர் மஞ்சள் கலந்த பாலை குடித்து தூங்கினால் தூக்கம் நன்றாக வரும்.
மஞ்சள் பால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதுடன், இருமல் மற்றும் சளி, காய்ச்சல் போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.
மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், வீக்கம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது. மஞ்சளில் சக்தி வாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றது.
தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை நீக்க உதவுவதுடன், சருமத்தையும் பளபளபாக்க வைக்கின்றது.
வயிற்று புண்கள், பெருங்குடல் அலர்ஜி இவற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மஞ்சள் கலந்த பாலை தினமும் குடித்து வரவும்.
மூளையில் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு மஞ்சள் கலந்த பால் அதிகம் உதவி செய்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |