கனேடிய ஜோடிக்கு இந்திய ரயிலில் நடந்த சம்பவம்! வைரலாகும் காணொளி
இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற கனேடியர்கள்,இந்திய ரயிலில் பயணித்த அனுபவம் குறித்து பகிர்ந்துக்கொண்டுள்ள விடயம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
குறித்த கனேடியர்கள் ரயில் ஒன்றில் தூங்கும் வசதி கொண்ட இருக்கைகளை முன்பதிவு செய்த நிலையில், ஒரு ரயில் நிலையத்தில் ரயில் நிற்க, சில சிறுவர்கள் ரயிலில் ஏறியதன் பின்னர் நிகழ்ந்த சம்பவம் குறித்து இவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து கனேடியரான கிம் குறிப்பிடுகையில், இந்தியாவில் ரயிலில் தூங்கும் வசதி கொண்ட இருக்கையை முன்பதிவு செய்தாலும், அது இரவில் தூங்குவதற்கு மட்டுமே, பகலில் மற்றவர்களுடன் இருக்கையை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பது தங்களுக்கு அப்போது தான் புரிந்தது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு நிமிடம்கூட தங்களால் தூங்கமுடியவில்லை என்பது உண்மைதான் என்றாலும், பிள்ளைகளுடன் ஜாலியாக விளையாடிக்கொண்டு பயணித்தது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது என பதிவிட்டுள்ளார்.
இந்த காணொளிக்கு நெட்டிசன்கள், பொதுவாக இதுபோல் பிள்ளைகள் வந்து விளையாடிக்கொண்டிருந்தால் அதை தொல்லையாக எடுத்துக்கொள்பவர்கள் உண்டு.
ஆனால், நீங்கள் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டதற்கு பாராட்டுக்கள் என்பது போன்ற நேர்மறையான கமெண்ட்டுகள் மூலம் இவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |