'தாய் கிழவி’ இயக்குநருக்கு காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான 'தாய் கிழவி' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கிய இப்படம், 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி, உலகளவில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.

ராதிகா சரத்குமார், அருள்தாஸ், சிங்கம்புலி, பாலா சரவணன், ரேச்சல் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் பெண் சுதந்திரத்தை வலியுறுத்திய கருத்துக்காக படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் பரிசு
இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் புதிய மஹிந்திரா BE 6 எலக்ட்ரிக் எஸ்யூவி காரை பரிசாக வழங்கினார். இதன் மதிப்பு ரூ.18 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற விழாவில், உற்சாகக் கைத்தட்டல்களுக்கு மத்தியில் இயக்குநர் பரிசைப் பெற்றுக்கொண்டார்.

'தாய் கிழவி' வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் - சிவகுமார் முருகேசன் கூட்டணி மீண்டும் 'சேயோன்' படத்தில் இணைந்துள்ளது.
இதில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |