பட்ஜெட்டிற்குள் கனடாவை சுற்றி பார்க்க வேண்டுமா? கண்கவர் இடங்களின் விவரங்கள்
விடுமுறைகள் என கூறும் போது அதனை குடும்பத்தினருடன் சேர்ந்து நேரத்தை செலவு செய்ய வேண்டும் என்று தான் நினைப்போம்.
எங்கு செல்லலாம்? நம்முடைய பட்ஜெட்டிற்குள் எந்த இடம் இருக்கின்றது? குழந்தைகளை எங்கு அழைத்து சென்றால் மகிழ்ச்சியாக இருப்பார்கள் ? இப்படி ஏகப்பட்ட சந்தேகங்கள் பெற்றார்களுக்கு எழும்.
இப்படியான சந்தேகங்கள் உள்ள போது கனடாவிற்கு செல்லலாம். இங்கு சுற்றிப் பார்க்க பல இடங்கள் இருக்கின்றன. இதனாலேயே இங்கு அனேகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
அழகிய சாலைகள், பனிமூடிய மலைகளின் அழகு என்பன பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கின்ற நாடாக இருக்கின்றது. அப்படி என்ன தான் இருக்கின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
கனடா
1. Niagara Falls
கனடா செல்லும் பயணிகளில்“ நயாகரா நீர்வீழ்ச்சியை” பற்றி தெரியாதவர்கள் என யாரும் இருக்க முடியாது. இந்த நீர்வீழ்ச்சி கனடாவுக்கும் அமெரிக்காவுக்கு இடையில் மூன்று தனித்தனி தொகுப்புகளாக காணப்படுகின்றன.
அதில் “ குதிரைவாலி நீர்வீழ்ச்சி” பிரபலமாக இருக்கின்றது. புது விதமான அனுபவத்தை ஏற்படுத்தும் இடமாக இது பார்க்கப்படுகின்றது. இங்கு செல்பவர்கள் இரவில் செல்லலாம்.
2. CN Tower
கனடா செல்லும் பயணிகள் CN Tower ற்கு செல்லாமல் வர மாட்டார்கள். சுற்றுலா பயணிகள் இந்த இடத்தை பார்ப்பதற்காக வேறு நாடுகளிலிருந்து வருவார்கள். சி.என் டவரானது, 360 ரெஸ்டூரன்ட்டுகளைக் கொண்டுள்ளது.
இதன் உயரம் வானத்தை தொட்டு பார்க்கும் அளவிற்கு இருக்கும். கண்ணாடியில் அலங்கரிக்கப்பட்டிருப்பதால் சுற்றி பார்ப்பதற்கும், அழகை ரசிப்பதற்கும் உகந்ததாக இருக்கும்.
3. Capilano Suspension Bridge
இந்த பாலம் கனடாவில் அதிகமான பயணிகளை ஈர்த்துள்ளது. இந்த பாலம் 140 மீட்டர் நீளமும் நதியிலிருந்து 70 மீட்டர் உயரமும் கொண்டமைக்கப்பட்டுள்ளது.
காட்டிற்குள் பச்சை கம்பளம் விரித்தாற் போல் ஒரு அழகை கண்களுக்கு கொடுக்கும். அத்துடன் இந்த இடமானது உங்கள் தைரியத்தை பரீட்சை பார்க்கும் ஒரு தளமாகவும் காணப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |