வானத்தில் இருந்து டைவ் அடித்த இளம்பெண்; பாராசூட் திறக்காததால் நேர்ந்த சோகம்!
டிக்டாக் பிரபலமான பெண் ஒருவர் ஸ்கை டைவிங் செய் தபோது தரையில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் டோரண்டோ பகுதியை சேர்ந்தவர் தன்யா பர்டஷி(21). டிக்டாக் பிரபலமான இவர் சில ஆண்டுக்கு முன் நடந்த “மிஸ் டீன் கனடா” அழகி போட்டியில் கலந்து கொண்டவர்.
இவர், ஸ்கை டைவிங்கில் ஆர்வம் கொண்ட தன்யா பலமுறை இருவர் குதிக்கும் ஸ்கை டைவிங் முறையில் உதவியாளருடன் வானத்தில் இருந்து குதித்துள்ளார்.
இதற்காக பயிற்சி பெற்று உரிமமும் வாங்கிய தன்யா தனியாக குதித்து டைவிங் சாகசம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், தன்யா பர்டஷி டோரண்டோவில் இருந்து 4 ஆயிரம் அடி உயரத்தில் வானத்தில் விமானத்திலிருந்து குதித்துள்ளார்.
மேலும், தரையை நெருங்கிய நிலையில் பாராசூட்டை அவர் விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாராசூட் முழுமையாக திறப்பதற்கு முன்பாகவே தன்யா பர்டஷி பரிதாபமாக தரையில் மோதி உயிரிழந்தார்.