ஒரு நோளில் கோடீஸ்ரர் ஆன தமிழ் சகோதரர்கள்! நடந்தது என்ன?
கனடாவில் தமிழ் சகோதரர்களுக்கு லொட்டரி அடித்த அதிர்ஷ்டம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
லொட்டரில் அடித்த அதிர்ஷ்டம்
பொதுவாக ஒருவரது வாழ்கைக்யில் எந்த நேரத்தில் அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதே தெரியாது. சில தருணங்களில் ஒரே நாளில் வாழ்வு தலைகீழாக மாறிவிடும்.
அந்த வகையில் கனடா நாட்டில் தமிழ் சகோதரர்களுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம் அனைவரையும் திக்குமுக்காட வைத்துள்ளது.
கனடா நாட்டின் ஒன்றாரியோ பகுதியில் சமீபத்தில் நடத்த லொட்டரி டிக்கெட் முடிவில் 5 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய்) இரண்டு தமிழ் சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் வென்றுள்ளனர்.
யோகராஜா பொன்னுதுரை, தவராஜா மற்றும் அருள்வதனி ஆகிய சகோதர சகோதரிகளே இந்த அதிர்ஷ்டசாலிகள். பரிசு வென்றதை அவரது சகோதரரி நம்பவில்லை என்றும், மற்றொரு சகோதரர் மயங்கியே கீழே விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
இந்த பரிசுத் தொகையை வைத்து கார் வாங்குதல், வீடு கட்டுதல், குழந்தைகளின் படிப்பு இஎன இவை அனைத்திற்கும் செலவு செய்ய உள்ளதாகவும் குறித்த தமிழ் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.