தொடர் போராட்டம்.. 50 ஆண்டுக்கு பின் கனடாவில் அவசர நிலை பிரகடனம் அறிவிப்பு!
கனடாவில் 50 ஆண்டுக்கு பின் அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கனடா அரசின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார்.
இதனால், லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தொடர் பிரச்சினைக்கு இன்று வரை முடிவு கிடைக்காததால், கனடாவில் அவசர நிலை பிறப்பிக்கப்படுவதாக, அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
மேலும், 50 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவில் பிறப்பிக்கப்படும் அவசர நிலை இதுவாகும். இதற்கு முன்பு 1980-ம் ஆண்டு வாக்கில் கனடாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு கூடுதல் அதிகாரமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
போராட்டங்களில் ஈடுபடுவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.