சர்க்கரை நோயாளி ஒரு வாரம் தொடர்ந்து வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடிங்க...உடலில் நிகழும் அற்புதங்கள் தெரியும்!
உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் காலையில் எழுந்ததும் சில பானங்களைக் குடிக்கிறார்கள்.
அதில் ஒன்று தான் இஞ்சி சாறு.
இந்த இஞ்சி சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது.
அவை என்னவென்பதை இப்போது காண்போம்.
இஞ்சியில் உள்ள சத்துக்கள்
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன.
அதுவும் இஞ்சியின் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகள் ஜிஞ்சரால் மூலம் தான் கிடைக்கிறது.
ஏனெனில் ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான உயிரியல் சேர்மங்களைக் கொண்டுள்ளது.
இஞ்சி ஜூஸ் தயாரிப்பது எப்படி?
இஞ்சி ஜூஸ் தயாரிப்பதற்கு, மிக்சர் ஜாரில் இஞ்சி துண்டுகளை போட்டு அரைத்து, அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார்.
ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைக் குடிப்பதால், உடலுக்கு வேண்டிய சத்துக்களை ஒரே டம்ளரில் பெறலாம்.
ஏனெனில் இந்த ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸில் ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி, பி3, பி6, புரோட்டீன்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன.
இரத்த சர்க்கரை மற்றும் பிபி கட்டுப்படும்
சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடிப்பது மிகவும் நல்லது.
ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய் வராமல் தடுக்கும்.