படுக்கை அறையில் தாவரங்கள் வளர்க்கலாமா? இந்த சந்தேகம் இனி வேண்டாம்
பொதுவாகவே பலரும் வீட்டினுள் உற்புற தாவரங்களை வளர்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் சில வகை தாவரங்கள் அழகிற்காகவும் மற்றும் சில தாவரங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கைக்காகவும் வளர்க்கப்படுகின்றது.
இவ்வாறு வளர்க்கப்படும் உற்புற தாவரங்களை படுக்கை அறையில் வளர்க்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும் தாவரங்களை படுக்கை அறையில் வளர்பதனால் ஏதேனும் ஆபத்து இருக்குமா என்பது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
இரவு நேரத்தில் படுக்கை அறையில்...
தாவரங்கள் பகல் வேளையில் கார்பன் டைஆக்சைட்டை உற் சுவாசத்துக்கு பயன்படுத்தி ஆக்சிசனை வெளிவிடுகின்றது. இரவு நேரங்களில் ஆக்சிசனை உள்ளெடுத்து கார்பன் டைஆக்சைட்டை வெளிவிடகின்றது. அதனால் இரவு நேரத்தில் படுக்கை அறையில் தாவரங்களை வளர்ப்பது சிறந்தது இல்லை என ஒரு சாராரின் கருத்து காணப்படுகின்றது.
இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்க முடியும் ? ஒரு விடயத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள் காடுகளில் வாழும் மிருகங்களும் மனிதர்களை போல் ஆக்சிசனை தான் சுவாசிக்கின்றது காடுகள் வெளிவிடும் கார்பன் டைஆக்சைட்டின் அளவுக்கு ஒரே இரவில் காட்டில் வாழும் அனைத்து மிருகங்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அப்படி நிகழவில்லையே... இயற்கையில் அதனை சமன் செய்யும் அளவில் தான் வாயுக்களின் சமநிலை காணப்படுகின்றது.
தாவரங்கள் கார்பன் டைஆக்சைட்டை இரவில் வெளிவிடுவதால் அதனை படுக்கை அறையில் வைக்கக் கூடாது என சொல்லும் பலர் இன்னொரு நாருடன் சேர்ந்து உறங்குகின்றனர்.
அல்லது செல்லப்பிராணிகளுடன் சேர்ந்து உறங்குகின்றனர் . ஒரு சிறிய தாவரம் வெளிவிடும் கார்பன் டைஆக்சைட்டின் அளவில் ஒப்பிடும் போது ஒரு மனிதன் வெளிவிடும் கார்பன் டைஆக்சைட்ட 40 மடங்கு அதிகம் என்பது நம்மில் பலரும் அறியாத உண்மை.
சாதாரண நிலையில் உள்ள ஒரு மனிதனுக்கு படுக்கை அறையில் உற்புற தாவரங்களை வளர்ப்பதால் எதுவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |