இந்த மூன்று வகை முடியில் உங்கள் முடி எந்த வகை? அப்போ நீங்க இப்படித்தான் இருப்பீங்க
பொதுவாக மனிதர்கள் எல்லோருக்கும் வேறு வேறு விதங்களில் கூந்தலின் அமைப்பு காணப்படும்.
அலை அலையான, சுருள் அல்லது நேரான போன்ற வடிவத்தில் தலைமுடியின் அமைப்பு அமைந்திருக்கும்.
ஏன் இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையான தலை முடி உள்ளது என்று எப்போதாவது யோசித்து உள்ளோமா?
இவ்வாறு இயற்கையான கூந்தல் வடிவமைப்புக்கள் உங்கள் ஆளுமைப் பண்புகள் எப்படி இருக்கும் என்பதை கூறுகின்றது.
இந்த சுவாரஸ்யமான ஆளுமை சோதனையை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் அவர்கள் முடி வகையின் அடிப்படையில் அவர்களின் ஆளுமைப் பண்புகளை அறிந்து கொள்ளுங்கள்.
அலை அலையான முடியின் ஆளுமைப் பண்புகள்
அலை அலையான முடி அமைப்பு உங்களுக்கு இருக்குமானால், நீங்கள் வாழ்க்கையின் ஓட்டத்துடன் பயணிக்கத் தயாரானவர்.
எந்நேரமும் ஆர்வத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள், சுதந்திரமே உங்களது ரகசிய ஆயுதம்.
ஆய்வு மற்றும் கற்றல் என தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதால் சவால்களை நேருக்கு நேர் சந்திக்கக்கூடியவர்கள்.
எப்போதும் பிரச்சனைக்கு வழியை கண்டறிவதில் கில்லாடி, உங்கள் ஆன்மாவை தூண்டும் விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.
சுருள் முடியின் ஆளுமைப் பண்புகள்
உங்களுக்கு சுருள் முடி இருந்தால், சுறுசுறுப்பானவர், நுண்ணறிவு மிக்கவர், அன்பானவர், மக்களை ஈர்க்கும் தன்மை உண்டு.
சில பொன்மொழிகளின் மூலம் வாழ்க்கையை நேர்கோட்டில் செலுத்தி வாழ்ந்து வருகிறீர்கள்.
ஆனாலும் உங்களது வெளிப்படைத்தன்மையை அப்பாவித்தனம் என்று நினைக்க வேண்டாம்.
யாரேனும் வெற்று வார்த்தைகளால் மட்டும் உங்களை ஈர்த்துவிட முடியாது, உங்கள் ஆன்மா மிக வலிமையானது.
நேரான முடியின் ஆளுமைப் பண்புகள்
உங்களுக்கு நேரான கூந்தல் அமைப்பு இருந்தால், உங்கள் ஆசைகள் எட்டக்கூடிய தூரத்தில் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
தலைசிறந்த வித்தைக்காரரான நீங்கள், கனவுகளை நடைமுறை படிகளுடன் சமநிலைப்படுத்துகிறீர்கள்.
தோல்வி என்பதே இல்லாமல் சாதனைக்கான பாதையை வகுத்துவிட்டு அதன்படி செயல்படுவீர்கள்.