புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா? பலரும் அறியாத சாஸ்த்திரம்
பொதுவாக புரட்டாசி மாதம் தெய்வீக வழிபாட்டுக்குரிய மாதமாக பார்க்கப்படுகின்றது.
இந்த மாதத்தில் இந்து மத மக்கள் திருமணங்கள், வீடு கிரகப்பிரவேசம் போன்ற எந்த விதமான சுப காரியங்களையும் செய்ய விரும்பமாட்டார்கள். எமது முன்னோர்கள் புரட்டாசி மாதத்தில் தான் மகாளய பட்சம் அனுசரிப்பார்கள்.
இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து நவராத்திரி பண்டிகை கொண்டாடுவார்கள்.
இவ்வளவு சிறப்புமிக்க புரட்டாசி மாதத்தில் ஏன் நல்ல காரியங்கள் செய்யக் கூடாது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
புரட்டாசி மாதம் செய்யக்கூடாத சடங்குகள்
1. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து நவராத்திரி பண்டிகை செய்வார்கள். இந்த காரணத்தினால் இந்த மாதம் திருமணம் செய்ய பெரியவர்கள் விரும்பமாட்டார்கள்.
2. இந்த மாதத்தில் வாஸ்து பகவான் தூங்கிக் கொண்டிருப்பார் என்றும் சொல்லப்படுகின்றது. இதனால் வாஸ்து பூஜைகள் செய்வது பெரிதாக பலன் தராது. விழித்திருக்கும் மாதங்களில் பூஜை செய்தால் நல்லதொரு பலனை எதிர்பார்க்கலாம். அத்துடன் புரட்டாசி மாதத்தில் வாடகை வீடாக இருந்தால் பால் காய்ச்சக் கூடாது என்கிறார்கள்.
3. பெண்களுக்கு செய்யும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று தான் வளைகாப்பு. இந்த நிகழ்வு மாத்திரம் புரட்டாசி மாதத்தில் செய்வார்கள். அதே சமயம் திருமணம், சாந்தி முகூர்த்தம் போன்ற சடங்குகள் நடத்துவதை தவிர்ப்பது நல்லது. அத்துடன் குழந்தைகளுக்கு மொட்டை அடிக்க காது குத்த போன்ற விஷயங்களை தடைகளின்றி செய்யலாம் என சொல்லப்படுகின்றது. அதுவும் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் மட்டுமே செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |