வெங்காயத்தில் கருப்பு அச்சு இருந்தா சாப்பிடலாமா? முழுசா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே சைவ உணவுகளாக இருந்தாலும் சரி அசைவ உணவுகளாக இருந்தாலும் சரி வெங்காயம் அதில் முக்கிய இடம் பிடிக்கின்றது.
வெங்காயத்தை சுவைக்காக பல்வேறு சமையலில் பயன்படுத்துகிறோம்.வெங்காயம் ஏறாளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
வெங்காயத்தை உரிக்கும் போது சில வெங்காயங்களில் கருப்பு அச்சு இருப்பதை அனைவருமே அவதனித்திருக்ககூடும். குறிப்பாக இப்போது கிடைக்கும் வெங்காயங்களில் அதிகமாக இப்படி கருப்பு அச்சுக்களை அவதானிக்க முடிகின்றது.
பலருக்கும் இப்படி இருக்கும் வெங்காயத்தை சாப்பிடலாமா..? என்ற சந்தேகம் இருக்கும் இது உடல் நலத்துக்கு ஆபத்தா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கருப்பு அச்சு பாதிப்பை ஏற்படுத்துமா?
வெங்காயத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
குறிப்பாக இந்த குளிர்காலத்தில் வைரஸ் மற்றும் பிற கிருமிகளால் ஏற்படும் பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
வெங்காயத்தில் இனிப்புத் தன்மை குறைவாக இருப்பதால், நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கூறுகள் அதிகம் இருப்பதால், அது நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும்.இது முக்கியமாக நம் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
பொதுவாக வெங்காயத் தோலை உறிக்கும்போது சில வெங்காயங்களில் கருப்பு அச்சு காணப்படுவதற்கு காரணம் ஆஸ்பெர்கிலஸ் நைகர் என்று அழைக்கப்படும் ஒரு வகை பூஞ்சை ஆகும்.
இந்த வகை பூஞ்சை மண்ணில் காணப்படுகிறது. அதுதான் வெங்காயத்திலும் வருகிறது. இந்த கருப்பு அச்சு இது மியூகோர்மைகோசிஸ் அல்ல. ஆனால் இந்த கருப்பு அச்சு ஒரு வகையான நச்சுவை வெளியிடும் என ஆய்வுத் தகவல் குறிப்பிடுகின்றது.
இது உயிரை பறிக்கும் அளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. இருப்பினும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
அலர்ஜி இருப்பவர்கள் இந்த கருப்பு அச்சு இருக்கும் வெங்காயத்தை தவிர்ப்பது சிறந்தது. மேலும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் இது காற்றில் மூலம் சுவசத்தில் பரவி ஆபத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால் சாதாரண மனிதர்கள் இவ்வகையான வெங்காயத்தை பாவிப்பதற்கு முன்னர் அதை நன்கு கழுவிய பின்னர் சமயலுக்கு பயன்படுத்தலாம். சிறிதவு உப்பு சேர்த்து கழுவுவது இன்னும் சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |