வீட்டில் வேலை செய்ய வந்தவருக்கு அடித்த Luck- ஒரே இரவில் கோடீஸ்வரரானது எப்படி?
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஜோசுவா ஹுடகாலுங் என்பவரின் வீட்டிலிருந்து கிடைத்த கல்லால் அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஒரே இரவில் அதிர்ஷ்டம்
இந்தோனேசியாவில் வசிக்கும் ஜோசுவா ஹுடகாலுங் என்ற நபர் வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அப்போது ஜோசுவார் வீட்டில் திடீரென பலத்த சத்தம் கேட்டு, அறைக்கு ஓடி வந்து பார்த்த போது பெரிய கல் விழுந்து கிடந்துள்ளது. அந்தக் கல்லைப் பார்த்த ஜோஷ்வா ஆச்சர்யப்பட்டுள்ளார்.
பின்னர் அந்த கல்லை ஆய்வு செய்த பார்த்த போது இது ஒரு சாதாரண கல் அல்ல, ஒரு விண்கல் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து குறித்து விண்கல்லை அமெரிக்காவைச் சேர்ந்த ஜாரெட் காலின்ஸ் என்பவருக்கு 1.4 மில்லியன் பவுண்டுகளுக்கு ( இந்திய மதிப்பில் ரூ. 14 கோடி)க்கு விற்பனை செய்துள்ளார்.
அப்படி என்ன உள்ளது?
ஜோஷ்வாவின் வீட்டில் விழுந்த விண்கல் 2.1 கிலோ எடையுள்ள பல வழிகளில் தனித்துவமான, மிகவும் அரிய கல்லாக இருந்தப்படியினால் இவ்வளவு பணம் கொடுத்து ஜாரெட் வாங்கியுள்ளார்.
மேலும், 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான கல்லை, விண்வெளி அடிப்படையிலான நிறுவனம் இது மிகவும் அரிதான CM1/2 கார்பனேசியஸ் காண்ட்ரைட் என்று கருதியது. 85 சதவீத விண்கற்கள் இந்த பொருளில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இந்த CM1/2 ஒரு அரிய கலவை என்றும் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஜோஷ்வா, “திடீரென்று ஒரு பெரிய சத்தம் வந்தது, அப்போது இந்த கல் தரையில் புதைந்து காணப்பட்டது. எனக்கு ஒரு அரிய பொக்கிஷம் கிடைத்ததை நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |