சாதம் வடித்த கஞ்சி கூந்தலுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதா? முழுசா தெரிஞ்சுக்கோங்க
நம் முன்னோர்கள் சாதம் வடித்த கஞ்சியை சருமத்திற்கும் கூந்தலுக்கும் பயன்படத்தவது தொண்டு தொட்டு வந்த பழக்கமாகும்.
ஆனால் சமீப காலமாக வளர்ந்துவரும் தொழிநுட்ப வளர்ச்சியால் அது மறைக்கப்பட்டு பல இரசாயன பொருட்களின் ஏற்றம் அதிகரித்தது.
சாதம் வடித்த கஞ்சி இளைமையான சருமத்திற்கும் ஆரோக்கியமான கூந்தலுக்கும் நன்மை தரும் என்பது ஆய்வின் மூலம் உறுதிசெய்யப்படடுள்ளது.
அந்த வகையில் சாதம் வடித்த கஞ்சியால் என்எனன்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சாதம் வடித்த கஞ்சி
வெயிலின் தாக்கத்தால் சருமம் பல பாதிப்புக்கு உட்பட்டிருக்கும். இந்த பாதிப்பை குறைக்க பயன்படுவது பெப்டைட்சுக்கு எனும் ஒரு கனிமச்சத்தாகும்.
இந்த பெப்டைட்சுக்கு பதார்த்தம் சாதம் வடித்த கஞ்சியில் நிறைவாக உள்ளது. இதை உடலுக்கு பயன்படுத்துவதால் சரும பிரச்சினை வராது.
இதனால் உடலின் ஆரோக்கிய சம்பந்தமான பிரச்சனைகளுக்கு சாதக்கஞ்சியை பளன்படுத்தலாம். அதனால் எந்த பக்க விளைவும் வராது.
இதில் கொலாஜான் உற்பத்தி அதிகமாக காணப்படுவதால் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
இந்த சாதத் தண்ணீரை உட்பூச்சாகவும் உள்ளுக்குள்ளும் எடத்தக் கொள்ளலாம். ஆக்சிஜனேற்ற அழுத்தம்' எனப்படும் ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்சில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும்.
இவ்வளவு குணநலங்கள் கொண்ட சாதக்கஞ்சியை கொரியன் பெண்கள் தங்கள் அழகுக்காக பயன்படுத்துகிறார்கள்.