தைராய்டு பிரச்சனை இருந்தால் கர்ப்பிணிகள் இயற்கையாக கருத்தரிக்கலாமா?
தைராய்டு சுரப்பி என்பது குரல் வளைக்கு சற்று கீழே அமைந்திருக்கும். இது T3 மற்றும் T4, ஆகிய ஹார்மோன்களை சுரப்பதற்கும், சேமிப்பதற்கும் பின்னர் உடல் முழுவதும் உள்ள செல்களை இந்த ஹார்மோன்கள் சென்றடைவதற்கு அவற்றை ரத்த ஓட்டத்தில் வெளியிடுவதற்கும் பொறுப்பேற்கிறது.
தைராய்டு சுரப்பி
இன்றைய கால கட்டத்தில் தைராய்டு பிரச்சனை என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் வருகின்றது. இந்த பிரச்சனையால் தற்போது ஏராளமான நபர்கள் குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, அதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
THS, T3 மற்றும் T4 ஹார்மோன்கள் அதிகப்படியாக அல்லது போதுமான அளவு சுரக்காமல் போகும் பொழுது அது ஒரு தனி நபரின் இயற்கை கருத்தரித்தல் விகிதத்தை பாதிக்கிறது.
இந்த நோய் வந்தால் அதற்கு சில அறிகுறிகளும் உண்டு. விவரிக்க முடியாத உடல் எடை இழப்பு, அதிக பசி, குறைவான மாதவிடாய் சுழற்சிகள், அதிக வியர்வை போன்றவை இதற்கான சில அறிகுறிகள்.
இந்த நோயை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டால் இது இறுதியில் குழந்தை பிறப்பது அல்லது கருக்கலைப்பு போன்ற பிரக்னன்சி சம்பந்தப்பட்ட சிக்கல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.
இதை தவிர இதனால் கர்ப்பத்தின் இறுதி கட்டத்தில் அதிக ரத்த அழுத்தம், குழந்தை குறை பிரசவத்தில் பிறப்பது, குறைந்த உடல் எடையோடு குழந்தை பிறப்பது போன்ற பிரச்சனை வரும்.
தாய் மற்றும் சேய் ஆகிய இருவரையும் இந்த கர்ப்ப பயணத்தின் போது பாதுகாக்க தைராய்டு ஹார்மோன் சீராக பராமரிக்கப்பட வேண்டும்.