நீரிழிவு நோயாளியிருந்தால் ஊறுக்காய் சாப்பிடலாமா? எச்சரிக்கை...!
பொதுவாக நீரிழிவு நோயாளர்கள் அவர்களின் உணவு விடயத்தில் மிகவும் கவனமாக நடந்து கொள்வார்கள்.
கட்டுபாடு இல்லாமல் நாம் சில உணவுகளை எடுத்து கொள்ளும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடும்.
இதன் காரணமாக நீரிழிவு நோயாளர்கள் சர்க்கரை கலந்த உணவுகள், பானங்கள், ஸ்நாக்ஸ் வகைகள் இப்படி எந்த உணவும் எடுத்து கொள்ளமாட்டார்கள்.
மேலும் குறிப்பிட்ட சில உணவுகள் சாப்பிடலாமா என்றே அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கும்.
அந்த வகையில் நீரிழிவு நோயாளர்கள் ஊறுகாய் சாப்பிடலாமா? என சந்தேகம் இருக்கும். இது தொடர்பில் ஒரு மருத்துவ விளக்கத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
ஊறுக்காய் சாப்பிடலாமா?
ஊறுக்காயில் குறைந்த அளவு கலோரிகளும் கார்போஹைட்ரேட்டுகளும் இருப்பதால் எப்போதாவது ஒருமுறை எடுத்து கொள்ளலாம். அதிலும் ஊறுக்காயில் 57 மில்லி கிராம் சோடியம் இருக்கிறது.
பக்கவாதம், இருதய நோய் ஆகிய நோய்களை இரத்த கொதிப்பை அதிகரிப்பதன் மூலம் ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.
ஊறுகாயில் இருக்கும் சோடியம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு அளவிற்கு அதிகமான வேலைகளை கொடுக்கின்றது.
இதே சமயம் ஊறுக்காயில் உள்ள சோடியம் வயிறு புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபாயம் கொண்டது என மருத்துவர்கள் ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்துள்ளார்கள்.
உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் ஆகிய உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்வதை தடுக்க வேண்டும்.