நீரிழிவு நோயை விரட்டியடிக்கும் பழம்! தினமும் சாப்பிட வேண்டுமா?
தினமும் காலையில் ஆப்பிள் பழத்தை எடுத்துக் கொள்வதால் உடலில் பல மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
ஆப்பிள் பழம் என்றாலே பக்க விளைவுகளின்றி உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அள்ளித்தருகின்றது என்றே கூறப்படுகிறது.
அவ்வளவு மருத்துவககுணங்கள் இந்த பழங்களில் இருக்கின்றன. தினமும் காலையில் ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதால் எண்ணற்ற நோய்கள் குணமாகிறதாக மருத்துவர்கள் ஆராய்ச்சிகளிலிருந்து தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், உடல் பருமன் மற்றும் சில புற்றுநோய்கள் போன்றவற்றை சரிச்செய்யலாம்.
அந்த வகையில் ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
ஆப்பிள் பழத்தின் நன்மைகள்
கொலஸ்ட்ரால் மற்றும் அதிக பிபியைக் குறைக்கும்
ஆப்பிள் பழத்தை தினமும் எடுத்துக் கொள்வதால் இரத்தழுத்தம் கட்டுபடுத்தப்படுகிறது. மேலும் இரத்த நாளச்சுவர்களிலிருக்கும் புறணியில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை படிய விடாமல் தடுக்கிறது.
இதனால் இதயத்துடன் தொடர்புடைய நோய்களின் தாக்கம் குறைவாக காணப்படுகிறது.
நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் சி சத்துக்கள் இதில் அதிகம் இருப்பதால் ஆப்பிள் பழத்தை தினம் ஒரு தூண்டு வீதம் சாப்பிடுவது சிறந்தது.
மேலும் நோயெதிர்ப்பு சக்திக்கு எதிராக செயற்படும் செல்களை, ஆதரவளிக்கும் செல்களாக மாற்ற உதவிச் செய்கிறது.
நீரழிவு நோயாளர்களை பாதுகாக்கும்
பொதுவாக நீரழிவு நோயாளர்கள் பழங்கள் எடுத்துக் கொள்வதால் ஈபத்து என பல தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால் இது உண்மையல்ல, ஆப்பிள் பழம் ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து என்பதால் இதனை நீரிழிவு நோயாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்மற்றும் நீரழிவு நோய் வகை இரண்டை இது கட்டுபடுத்துகிறது.
புற்றுநோயை தடுக்கிறது
புற்றுநோய்களுக்கு எதிராக செயற்படும் பழங்களில் ஆப்பிள் பழம் முதலிடத்தை பிடிக்கிறது. இதனை உட்க் கொள்வதால் ஆக்ஸிஜனேற்றங்கள் மார்ப்பக புற்றுநோய் மற்றும் இன்னும் சில புற்றுநோய்களை ஏற்படாமல் தடுக்கிறது.
மருத்துவ ஆய்வுகளின்படி இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நரம்பியல் கோளாறுகள்
ஆப்பிள்களில் இருக்கும் வைட்டமின்கள் ஃபிளாவனாய்டு குர்செடின், நியூரான்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இதனால் மிக வேகமாக பரவும் அல்சைமரிலிருந்து எம்மை பாதுகாக்கிறது.
