நீரிழிவு நோயாளிகளுக்கு வெல்லம் சிறந்ததா-சக்கரை சிறந்ததா? பலரும் அறியாதது
இனிப்பு சுவை என்பது பல வடிவங்களில் நாம் உணவாக எடுத்துக்கொள்கிறோம். நாம் உட்கொள்ளும் அனைத்து உணவுப் பொருட்களிலும் ஏதோ ஒரு வடிவத்தில் சர்க்கரை இருக்கிறது.
நாம் காலை அருந்தும் தேநீர் முதல் சாப்பிடும் இனிப்புகள் வரை, அதில் சர்க்கரை உள்ளது.
அந்த வகையில் நக்கரை நோயாளிகள் சக்கரையை தவிர்த்து வெல்லத்தை சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா அல்லது சக்கரையை சாப்பிட்டால் உடலுக்கு நல்லதா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெல்லம் சக்கரை
சக்கரை சாப்பிடுவதை விட வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். ஆனால் இதில் இன்னும் அறிந்துகொள்ள வேண்டிய விடயம் நிறைய உள்ளது. வெல்லம் ஒரு இனிப்பு மட்டுமல்ல. அது ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும்.
வெற்று கலோரிகளை வழங்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்று இல்லாமல், வெல்லத்தில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. எனவே சக்கரை வேண்டாம் என நினைப்பவதுகளுக்கு இந்த வெல்லம் சிறந்த தேர்வாக இருக்கும்.
வெல்லம் சாப்பிடுவதால் செரிமான நொதிகளைத் தூண்டுகிறது, உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நமது உடலில் அதிகரிக்கின்றன.
இது தவிர வெல்லம் சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதன் மூலம் நமது இரத்த சக்கரை அளவு கட்டுபடுகிறது அதுமட்டுமன்றி எடை இழப்பிற்கும் அதிக உதவி செய்கிறது.
நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா?
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட வெல்லத்தில் கிளைசெமிக் குறியீடு (GI) குறைவாக இருக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை இன்னும் அதிகரிக்கக்கூடும்.
எனவே, நீரிழிவு நோயாளிகள் அmவர்களின் உணவில் வெல்லத்தைச் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டால் அதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது அவசியம். ஒவ்வாமை இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனையை பெற்று வெல்லத்தை சாப்பிடுவது நல்லது.
சர்க்கரைக்கு பதில் வேறெதாவது இனிப்பு சாப்பிட நினைப்பவர்களுக்கு வெல்லம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இருப்பினும், அதை மிதமாக மட்டுமே உட்கொள்ள வேண்டும்.
இந்த மாற்று நன்மை பயக்கும் என்றாலும், வெல்லமும் ஒரு வகை சர்க்கரை தான். உங்கள் உட்கொள்ளலை சமநிலைப்படுத்தி, பதப்படுத்தப்படாத, தூய வெல்லத்தைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். எனவே சக்கரை நோயாளிகளுக்கு சக்கரையை விட வெல்லம் நன்மை தந்தாலும் அதை மிதமாக உட்கொள்வது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |