காடு மாதிரி கூந்தல் வளரணுமா? பெருஞ்சீரகத்தை இப்படி சாப்பிடுங்க...
பொதுவாகவே அனைவரின் சமையல் அறையிலும் நிச்சயம் இருக்க கூடிய ஒரு பொருள் தான் பெருஞ்சீரம்.இது இந்திய உணவுகளில் முக்கிய இடம் வகிக்கின்றது.
பெருஞ்சீரகம் விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.
இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் பல ஆபத்தான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
பெருஞ்சீரகத்தை உட்கொள்வதால் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் குறைகிறது. இதன் எண்ணெயை நாம் நமது சருமம் மற்றும் கூந்தலுக்கு பயன்படுத்தப்படலாம்.
பெருஞ்சீரகத்தை எப்படி பயன்படுத்தி கூந்தல் வளர்சியை அதிகரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
பெருஞ்சீரகத்தின் நன்மைகள்
பெருஞ்சீரகத்தில் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகமாக காணப்படுவதால் இதை வாயில் போட்டு மெல்லும்போது தலைமுடி உதிர்வு தடுக்கப்படுகின்றது.
பெருஞ்சீரகத்தை அடிக்கடி சாப்பிடுவது கூந்தலின் வேர்களை பலமாவதோடு முடி உடைவதையும் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக கூந்தவல் வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
பெருஞ்சீரகம் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. உடலில் ஏற்படும் வீக்கம், எரிச்சல் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. இந்த நிலைமைகளைத் தடுப்பதன் மூலம், புற்றுநோய் உட்பட பல ஆபத்தான நோய்களின் ஆபத்து குறைக்கப்படுகிறது.
பெருஞ்சீரகத்தில் நிறைந்துள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் இ, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது. மேலும் கூந்தல் வளர்ச்சியில் பாரிய பங்கு வகிக்கின்றது.
பெருஞ்சீரகத்தில் ஃபிளாவோனாய்டு மற்றும் பீனோலிக் கலவைகள் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் செறிச்து காணப்படுகின்றது இது உடலில் ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை குறைப்பதிலும் பெரும் பங்பு வகிக்கின்றது.
கூந்தல் உதிர்வுக்கு ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் தான் பிரதான காரணமாக இருக்கின்றது. மேலும் பெருஞ்சீரகத்தில் ஹார்மோனை சமநிலைப்படுத்தும் தன்மைகள் இருப்பதால் மறைமுகமாக தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
தினசரி சாப்பாட்டுக்கு பின்னர் ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடுவது செரிமான கோளாறுகளுக்கு தீர்வு கொடுப்படுடன் கூந்தல் வளர்சிக்கும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |