விமான பயணத்தின் போது துளசிச்செடி எடுத்து செல்லலாமா?
பலரும் வெளிநாடுகள் செல்லும் போது பல பொருட்களை எடுத்து செல்ல ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு சில பொருட்கள் மட்டும் தான் விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி இருக்கும்.
ஆனால் தற்போது விமானப் பயணத்தின்போது ஒரு துளசி செடியை எடுத்துச் செல்லலாமா என்ற கேள்வி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் சமீபத்தில், எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட ஒரு பதிவு தான். இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் விமானத்தில் செடிகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டா? விமான நிலைய விதிகள் என்ன சொல்கின்றன? போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விமானத்தில் துளசி செடி
எக்ஸ் தளத்தில் யூசர் ஒருவர் பதிவிட்ட வீடியோவில், “என் அம்மா தனது தோட்டத்தில் இருந்து எனக்காக ஒரு சிறப்பு துளசி செடியை பேக் செய்தார். விமான நிலைய பாதுகாப்பு அதை அனுமதிக்காது என்று நினைத்தேன்.
ஆனால், அவர்கள் என் அம்மாவைவிட ஆன்மீகவாதிகள் போலத் தெரிந்தனர்! துளசிக்கு தனி பாதுகாப்பு சோதனைகூட நடந்தது. இப்போது அது என் பால்கனியில் நன்றாக வளர்கிறது, என் வீட்டின் நினைவாக” என்று பகிர்ந்தார்.
இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலானது. இதனைத் தொடர்ந்து, “விமானத்தில் தாவரங்களை எடுத்துச் செல்லலாமா?” என்கிற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.

அனுமதி உண்டா?
அந்த வகையில் பார்த்தால் விமானத்தில் துளசி செடியை எடுத்துக்கொண்டு செல்லலாம் என கூறப்படுகின்றது. ஆனால், அதற்கென சில கட்டுப்பாடுகள் உள்ளன.
உள்நாட்டு விமானங்களில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் தாவரங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன. ஆனால் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட விதிகள் இருக்கலாம்.
சில நிறுவனங்கள் அவற்றை கையிலேயே எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்.
சில அதனை சரக்குப் பட்டியலில் சேர்த்து அனுமதிக்கலாம். ஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பயணிகள் தங்களது பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாகவே விமான நிறுவனத்தின் விதிகளை கவனிக்க வேண்டும்.
My mom packed a very special tulsi plant for me from her garden.
— Ritu Joon (@ritujoon2j) November 8, 2025
I thought airport security would stop me, but turns out they were more spiritual than my mom.
Tulsi got VIP treatment with separate security screening protocols.
Now she’s happily planted on my balcony,… pic.twitter.com/UM09e0w4to
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |