ஒட்டகங்கள் பல மாதங்கள் சாப்பிடாமல் உயிர் வாழ இந்த உறுப்பு தான் காரணமாம் - என்ன அது?
ஒட்டகங்கள் கடுமையான வெப்பத்திலும், தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காத சூழல்களிலும் கூட உயிர்வாழும் என்பது எண்மை தான் ஆனால் மனிதர்களின் மூட நம்பிக்கையும் இதில் உள்ளது.
ஒட்டகம்
பாலைவனத்தை நினைக்கும் போது முதலில் நினைவிற்கு வரும் விலங்கு ஒட்டகம். கடுமையான வெப்பத்திலும், தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காத சூழல்களிலும் கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது.
ஆனால், ஒட்டகத்தைப் பற்றி பலருக்கும் உள்ள நம்பிக்கைகளில் சில தவறானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
திமிலில் தண்ணீர் இல்லை ஒட்டகங்கள் தங்களின் திமில்களில் தண்ணீரை சேமிக்கின்றன என்ற நம்பிக்கை தவறானது. உண்மையில், திமில்கள் கொழுப்பால் நிரம்பியவை.
உணவு கிடைக்காத சூழலில் இந்தக் கொழுப்பு ஆற்றலாக மாறி, ஒட்டகத்தை உயிர்வாழ உதவுகிறது. கொழுப்பு குறைந்தால், திமில் சுருங்கும்.
மாதக்கணக்கில் உணவின்றி உயிர்வாழும் திறன் திமிலில் உள்ள கொழுப்பின் உதவியால், ஒட்டகங்கள் பல மாதங்கள் உணவின்றி வாழ முடியும். இந்த திறன் காரணமாகவே, அவை பாலைவனங்களில் நீண்ட தூரம் பயணிக்கின்றன.
மூன்று வகையான ஒட்டகங்கள்
உலகில் மூன்று வகையான ஒட்டகங்கள் உள்ளன
டிரோமெடரி ஒட்டகம் – ஒரே ஒரு திமில் கொண்டது; உலகில் 90% இதுவே.
பாக்டிரியன் ஒட்டகம் – இரண்டு திமில்களுடன் குளிரான பாலைவனங்களில் வாழ்கிறது.
வைல்ட் பாக்டிரியன் ஒட்டகம் – வடமேற்கு சீனாவிலும் மங்கோலியாவிலும் காணப்படும் அரிய இனமாகும்.
பிறக்கும்போது திமில் இல்லை
ஒட்டகக் குட்டிகள் பிறக்கும் போது திமில் இல்லாமல் பிறக்கின்றன. பிறந்த 10 மாதங்களுக்குப் பிறகே திமில்கள் உருவாகத் தொடங்குகின்றன.
வாரக்கணக்கில் தண்ணீரின்றி வாழும் சக்தி
ஒட்டகங்கள் தண்ணீரின்றி வாரக்கணக்கில் உயிர்வாழும் திறன் கொண்டவை. அவை தண்ணீர் கிடைத்தவுடன் குறுகிய நேரத்தில் மிக அதிக அளவில் குடிக்க முடியும். ஆச்சரியமாக, சில நேரங்களில் மூன்று நிமிடங்களில் 200 லிட்டர் வரை குடிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |