மனசாட்சியின்றி ஏமாற்றும் ராசியினர் இவர்கள் தானாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள்,நிதி நிலை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே மற்றவர்களை எளிதில் ஏமாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, தங்களின் தேவைக்கான யாரையும் ஏமாற்றுவதற்கு தயங்காத ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் தங்களின் மர்மமான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்களின் உள்ளுணர்வுகளையும் ஆசைகளையும் யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பாதவர்களாக இருப்பார்கள்.
இந்த ராசியினர் தங்களின் நோக்கங்களை அடைவதற்கு அதிக முன்னுரிமை கொடுப்பதனால், மற்றவர்களை ஏமாற்றும் சூழ்நிலையில் சிக்கிக்கொள்வார்கள்.
இவர்கள் தங்களின் இலக்கையும், ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள யாரையும் ஏமாற்றலாம் என்ற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தனுசு

தனுசு ராசியினர் இயல்பாகவே சாகச உணர்வுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் வாழ்க்கையில் சுவாரஸ்யம் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
இவர்களின் இந்த குணம் எந்த உறவிலும் இவர்களை நீடிக்கவிடாது.இதனால் இவர்களின் மகிழ்சிக்காக மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காது, ஏமாற்றிவிட்டு உறவில் இருந்து வெளியேறுவார்கள்.
இவர்களின் நோக்கம் மற்றவர்களை ஏமாற்றவேண்டும் என்பதாக இருக்காது.ஆனால் இவர்களின் ஆசைகளின் மீது மட்டுமே கவனம் செலுத்துவதால், இவர்கள் மற்றவர்களை பல நேரங்களில் ஏமாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். இவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்பதும் இவர்களின் செயலும் முற்றிலும் வேறுப்பட்டதாக இருக்கும்.
இவர்கள் நெருங்கிய உறவுகளிடமும் கூட தங்களின் தனிப்பட்ட விடயங்கள் குறித்து பகிர்ந்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள்.
இவர்களின் இந்த குணம் உறவுகளுக்கிடையில் மன கசப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தும். இவர்களின் இயல்பிலேயே ஏமாற்றும் குணம் நிச்சயம் இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        