கோழிகள் மீது கொண்ட அன்பால் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை! அப்படி என்ன செய்தார்?
கோழிப் பண்ணையில் 4 கோழிகளை மீட்டதால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு ஒரு இளம் பெண் தள்ளப்பட்டுள்ள சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோ ரோசன்பெர்க் (23 வயது). இவரது தந்தை கால்நடை மருத்துவர் என்பதால் சுமார் 40 ஏக்கரில் பூனை, நாய் என வளர்ப்பு விலங்குகளுக்கு மத்தியில் வளர்ந்தால் இவருக்கு விலங்குகள் நலன் குறித்து அதிக அக்கறை காணப்பட்டுள்ளது.

இதனால், விலங்கு நல ஆர்வலராக பணியாற்றி வந்த ரோசன்பெர்க், கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம், சான் பிரான்சிஸ்கோவிற்கு அருகே உள்ள பெட்டலுமா கோழிப் பண்ணைக்கு தனது நண்பர்களுடன் ஆராய்ச்சிக்காக சென்றுள்ளார்.
அதன் போது பண்ணை ஊழியர் போல் உடையணித்து பண்ணை உள்ளே ரோசன்பெர்க், லாரியில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கோழிகளில் இருந்து 4 கோழிகளை மட்டும் வாளிகளில் மறைத்து வெளியில் கொண்டுசென்றுள்ளார்.

5 ஆண்டுகள் சிறையா?
பின்னர், அந்த கோழிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த ரோசன்பெர்க், அதில் கோழிகள், வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதையும் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளால் அவதிப்படுவதையும் கண்டுபிடித்து கோழி பண்ணைகளுக்கு எதிராக எதிர்ப்பு குரலை கிளப்பியுள்ளார்.

ஆனால், கோழி பண்ணைக்குள் புகுந்து திருடியதாக குறித்த பண்ணை காரர்கள் ரோசன்பெர்க் மீது வழக்குப்பதிவு செய்ததால், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |