Bigg Boss 9: அடிதடியில் களேபரமாகிய பிக் பாஸ் வீடு... உள்ளே சென்ற பழைய போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் வந்த பின்பு போட்டியாளர்களின் விளையாட்டு தாறுமாறாக மாறியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகியது.
இந்த வீட்டிலிருந்து இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நான்கு பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே சென்றுள்ளனர்.
வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே சென்றதும் ஒட்டுமொத்த போட்டியாளர்களின் செயல்பாடு முற்றிலும் மாறுபட்டுள்ளது.

அடிதடியில் போட்டியாளர்கள்
இன்றைய முதல் ப்ரொமோ காட்சியில் போட்டியாளர்களான கம்ருதின், பிரவீன், பிரஜன் ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன் ஆரம்பத்தில் பிரவீன் கம்ருதின் மட்டுமே சண்டை நடந்த நிலையில், அதனை தடுக்க சென்ற பிரஜனுக்கும் கம்ருதினுக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் ஒட்டுமொத்த போட்டியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதுடன், இவர்களை தடுத்து நிறுத்துவதற்கு பல முயற்சிகளையும் செய்துள்ளனர்.

ஆனால் இதில் ஒரு டுவிஸ்ட் என்னவெனில் இவர்கள் மூன்று பேரும் பிளான் செய்து இந்த சண்டையை போட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
பிரியங்கா எண்ட்ரி
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா, தீபக், மஞ்சரி ஆகிய மூன்று பேரும் உள்ளே விருந்தினராக வந்துள்ளனர்.
இதனால் பிக் பாஸ் வீடு ஆஹா ஓஹோ ஹோட்டலாக மாறியுள்ளது. உள்ளே வந்துள்ள விருந்தினர்களை போட்டியாளர்கள் அனைவரும் வரவேற்று உபசரித்துள்ளனர்.

இதில் பிரியங்கா கூறும் போது சீசன் ஒன்பதை வேற மாதிரி மாற்றி அமைக்கும் டாஸ்க்காக இது இருப்பதாக கூறியுள்ளார். இதனால் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பும் பயங்கரமாக எகிறியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   |