முட்டைக்கோஸ் பொரியல்: இப்படி ஒருமுறை செய்து பாருங்க... மிச்சம் வைக்கவே மாட்டாங்க
கீரை வகையை சேர்ந்த முட்டைகோஸில் வைட்டமின் ஏ, உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான சி மற்றும் கே போன்றவை நிறைந்து காணப்படுகின்றது.
முட்டைகோஸ் உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை கட்டுப்படுத்த பெரிதும் துணைப்புரிகின்றது.
முட்டைகோஸ் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சீர்செய்ய உதவுகின்றது.
பெரும்பாலானவர்களின் பிடிக்காத உணவு பட்டியலில் இடம்பிடிக்கும் மருத்துவ குணங்கள் நிறைந்த முட்டைகோஸை அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு பொரியல் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - சிறிய துண்டு (துருவியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
உப்பு - 1/2 தே.கரண்டி
பாசிப்பருப்பு - 2 தே.கரண்டி
முட்டைக்கோஸ் - 1/4 கிலோ
துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை
முதலில் முட்டைக்கோஸை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பாசிப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்
பின்னர் அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயத்தை அதனுடன் சேர்த்து, உப்பு தூவி வெங்காயம் பொன்னிநிறமாகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனடன் ஊற வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து 1 நிமிடம் வரை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து கிளறி, மூடி வைத்து 8-10 நிமிடம் மிதமான தீயில் நன்றாக வேக வைத்து இறுதியாக துருவிய தேங்காயை தூவி இறக்கினால் மணமணக்கும் சுவையில் முட்டைக்கோஸ் பொரியல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |