தங்க நகை வாங்க போறீங்களா? அப்போ இந்த விடயங்களை கவனமாக பாருங்க
ஆண்களை விட பெண்களே தங்கம் வாங்குவதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனினும், தங்க நகைகளை வாங்கும் பொழுது குறிப்பிட்ட சில விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
தங்க நகை வாங்கும் பொழுது நாம் விடும் சிறு தவறுகள் கூட பெரியளவிலான நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
தங்க நகைகள் வாங்கும் பொழுது குறிப்பிட்ட சிலர் அதனை சுற்றி சுற்றி பார்ப்பார்கள். அதன் எடையை இரண்டு, மூன்று தடவைகள் பரிசோதிப்பார்கள். சுத்தமாக 100 வீதம் தங்கத்தினால் செய்யப்பட்ட நகையை வாங்க முடியாது.
ஆனால் 22 கரட், அதாவது 92 வீத சுத்தமான தங்கத்தினால் செய்யப்படும் நகைகளாகும். தங்கத்தின் தூய்மை கரட் எனப்படும் அலகால் குறிக்கப்படுகிறது. 24 கரட் தங்கம் 99.9 வீதம் தூய்மையாகவும், 22 கரட் தங்கம் 92 வீதம் தூயதாகவும் இருக்கும்.
அந்த வகையில் தங்க நகைகள் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கவனிக்க வேண்டிய விடயங்கள்
1. தங்க நகை வாங்கும் போது 91.6 வீத அளவிற்கான ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா? என்பதனை பரிசோதிக்க வேண்டும். “ஹால்மார்க் சான்றிதழ்” பெற்றிருந்தால் அது தூய்மையான தங்கமாகும். “ஹால்மார்க்” எனப்படுவது நகையில் அந்தக் கடையின் பதிவு செய்யப்பட்ட உரிம எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையின் உரிம எண் தானா? என்பதையும் கேட்டு தெரிந்திருக்க வேண்டும்.
2. தங்கத்தின் விலை அதன் தரத்தைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. சந்தையின் வீதத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றமடையும். நீங்கள் வாங்கும் நாளில் தங்கம் விலை என்ன என்பதனை தெரிந்திருப்பது அவசியம்.
3. தங்க நகை தயாரிக்கும் போது ஏற்படும் செய்கூலி மற்றும் சேதாரங்கள் நகையின் விலையுடன் சேர்க்கப்படுகின்றன. அந்த நகைகளின் செய்கூலி அந்த குறிப்பிட்ட நகையில் உள்ள டிசைன்கள் மற்றும் இயந்திரத்தை பயன்பாடு அதிகமாக இருக்கிறதா? என்பதனை பரிசோதிக்க வேண்டும். அதில் கைகளால் செய்யப்பட்ட நகைகளை விட இயந்திரத்தினால் வடிவமைக்கப்பட்ட நகைகளின் விலை குறைவாக இருக்கும்.
4. பெரும்பாலான தங்க நகைகள் எடை போட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதனால் அதிக எடை உள்ள நகைகள் விலை அதிகமாக கணிக்கப்படும். அதே போன்று தற்போது பெண்கள் வைரங்கள் மற்றும் மரகதங்களைப் போன்ற விலையுயர்ந்த கற்கள் நகைகளில் சேர்க்கப்படுகின்றன. இப்படியான சந்தர்ப்பங்களில் அவற்றை நீக்கினால் எவ்வளவு எடை வருமோ அதற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |