கொளுத்தும் வெயிலை சமாளிக்க கஷ்டப்படுறீங்களா? இந்த ஒரு பானம் மட்டும் போதுமாம்
கோடை காலத்தில் வெப்பத்தை சமாளிப்பதற்கு மோர் முக்கிய பானமாக உள்ள நிலையில், இதிலுள்ள நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலத்திற்கு ஏற்ற மோர்
கோடை கால குளிர்ச்சியமான பானமாக மட்டுமின்றி, ஆரோக்கியத்திற்கு முக்கிய பானமாக மோர் திகழ்கிறது. வெயில் காலங்களில் உடலை திறம்பட குளிர்விக்கின்றது.
உடம்பிற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கின்றது. காலம் காலமாக இந்திய உணவுகளில் இருந்து வரும் நிலையில், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அளிக்கும், முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
மோர் அனைவராலும் விரும்பப்படுவதற்கு முக்கிய காரணம் அதன் பன்முகத்தன்மை. இவற்றில் குறைந்த கொழுப்பு மற்றும் புரதம் அதிகளவில் உள்ளது. இது தசை வளர்ச்சி மற்றும் உடல் வலியை போக்க உதவுகிறது.
மோர் உடற்பயிற்சி ஆர்வலர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. கால்சியம், பொட்டாசியம் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மோர், எலும்பு அடர்த்தி மற்றும் தசை வலிமையை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் உள்ள கால்சியம் அவர்களின் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், தெரிமானத்திற்கும் சிறந்து விளங்குகின்றது. மேலும் வயிற்று பிரச்சனை போக்குவதுடன், ஆரோக்கியமான குடலை ஊக்குவிக்கவும் செய்கின்றது.
மோர் வழக்கமான நுகர்வு இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, ஆரோக்கியத்திற்கு நன்கு சிறந்த அணுகுமுறையை வழங்குகிறது.
எனவே, சூடான வெயில் காலத்தில் மோர் உடலுக்கு நன்மையை தருகிறது. ஆதலால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மோர் ஆரோக்கியமான தெரிவாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
