வெள்ளைப்படுதலை கட்டுபடுத்தும் கசாயம்- எப்படி செய்றாங்க தெரியுமா?
மாதவிடாய் இல்லாத போது பெண்களின் ,பிறப்புறுப்பில் இருந்து வரும் வெளியேற்றம் “வெள்ளைப்படுதல்” என அழைக்கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில், vaginal discharge என்றும் கூறுவார்கள்.
வெள்ளைப்படுதல் என்பது பருவமடைந்த பெண்களுக்கு இயல்பான ஒரு உடல் செயல்பாடாக தான் பார்க்கப்படுகிறது. இது குறித்து பயம் கொள்ள தேவையில்லை. ஆனால் வெள்ளைப்படுதலின் போது நிறத்தில் அல்லது மணத்தில் வித்தியாசம் இருந்தால் அவை ஆரோக்கியமானவை அல்ல.
பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலியல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் மருத்துவர்களிடம் உரிய ஆலோசனைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிலருக்கு வெள்ளைப்படுதல் காரணமாக உள்ளாடையில் வித்தியாசமாக முட்டையின் வெள்ளை கருவை காணலாம். இது என்பது தெரியாமல் சிலர் பயம் கொள்வார்கள். இதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள பயம் கொள்பவர்கள், வீட்டிலுள்ள மூலிகைகளை கொண்டு “பாட்டி வைத்தியம்” செய்து பார்க்கலாம்.
அந்த வகையில், வெள்ளைப்படுதல் பற்றிய விளக்கத்தையும், அதனை சரிச் செய்ய பாட்டி வைத்தியம் முறையில் எப்படி கசாயம் செய்கிறார்கள் என்பதனையும் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
1. முட்டையின் வெள்ளை கரு போன்று வெளியேறுதல்.
முட்டையின் வெள்ளை கரு போன்று வெளியேறினால் அது சாதாரணமானது. உங்களுடைய விரலால் தொடும் பொழுது ஒட்டும் தன்மையுடன் இருக்கும். வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் கூட இருக்கும். இந்த நிறங்களில் வெளியேறினாலும், எந்தவித துர்நாற்றமும் இல்லை என்றாலும் இந்த வெள்ளைப்படுதலால் பாதிப்பு எதுவும் இல்லை.
2. சிவப்பு
வழக்கத்திற்கு மாறாக வெள்ளைப்படுதல் ஏற்படும் பொழுது சிவப்பு நிறத்தில் இருந்தால் மாதவிடாய் சுழற்சி நெருங்கி வருவதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மாதவிடாய் சுழற்சி வர இன்னும் நிறைய நாட்கள் இருக்கும் பொழுது சிவப்பு நிறத்தில் வெளியேறினால் அது இயல்பானது அல்ல. உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
3. பழுப்பு(Brown)
வெள்ளைப்படுதல் பழுப்பு நிறத்தில் வெளியேறினால் மாதவிடாய் சுழற்சி அச்சமாக இருக்கலாம். பிறப்புறுப்பில் அமில சூழல் இருந்தால் ரத்தம் பழுப்பு நிறமாக மாறி வெளியேறும். பெண்களுக்கு மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாள் முன்பும், பின்பும் இல்லாமல் வேறு நாட்களில் பழுப்பு நிற வெளியேற்றும் இருப்பின் மருத்துவரை பார்க்க வேண்டும்.
4. சிவப்பு அல்லது மஞ்சள்
உள்ளாடையில் அல்லது கழிப்பறையில் இருக்கும் பொழுது கடும் மஞ்சள் நிறத்தில் வெள்ளைப்படுதல் வெளியேறினால் அது ஆபத்தான நிலையை குறிக்கிறது. அதே போன்று பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிறத்திலும் வெளியேறும். இது பாலியல் ரீதியான தொற்றுக்களை குறிக்கும். இதற்கு STI பரிசோதனை செய்ய வேண்டும். அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை பார்க்க வேண்டும்.
5. தயிர் வெள்ளை
சிலருக்கு தயிர் போன்று வெள்ளைப்படுதல் வெளியேறும். இது பூஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அரிப்பு மற்றும் மீன் அல்லது அம்மோனியா அல்லது உலோகம் போன்ற துர்நாற்றம் வந்தால் தொற்று இருப்பது உறுதி. இது பெண்களின் வெஜைனாவில் pH சமநிலையில் ஏற்படும். கட்டாயம் மருத்துவரை பார்க்க வேண்டும்.
தேவையான பொருட்கள்
- வில்வ இலை – 10 இலைகள்
- மஞ்சள் (சிறிது பொடி) – 1/4 டீஸ்பூன்
- தூள் கடுகு – 1/4 டீஸ்பூன்
- தூள் மிளகு – 1/4 டீஸ்பூன் தூள்
- ஜாதிக்காய் – சிட்டிகை
- தண்ணீர் – 2 கப்
கசாயம் தயாரிப்பது எப்படி?
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வில்வ இலை, மஞ்சள்த்தூள்,கடுகு, மிளகுத்தூள், ஜாதிக்காய் பொடி ஆகிய பொருட்களை ஒவ்வொன்றாக போட வேண்டும்.
இதனை மிதமான சூட்டில் அடுப்பை வைத்து விட்டு சுமாராக 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஊற்றிய தண்ணீர் பாதியாகும் வரை காய்ச்சி இறக்கவும்.
கசாயத்தை வடிகட்டி, ஆறியதும் காலை மற்றும் மாலை என இரு முறை சாப்பாட்டுக்கு பின் குடிக்கவும்.
பலன்கள்
- வயிற்றில் உள்ள நச்சுகளை வெளியேற்றும்.
- வெள்ளைப்படுதலை (white discharge) கட்டுப்படுத்தும். இதனால் பெண்கள் அடிக்கடி பருகலாம்.
- கோடைக்காலங்களில் உடல் அதிகம் வெப்பமடைந்திருக்கும். இதனால் கூட சிலருக்கு வெள்ளைப்படுதல் ஏற்படும். இதனால் பெண்கள் அவர்களின் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- வயிற்றில் புண்கள் இருந்தால் இந்த கசாயம் குடித்தால் குணமாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
