ஹோட்டல் ஸ்டைல் பட்டர் கார்லிக் மஷ்ரூம்: இனி வீட்டிலேயே செய்யலாம்
காளான் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக காணப்படுகிறது.
இதில் அதிகளவான புரதச் சத்துக்கள் காணப்படுகின்றன.
சரி இனி பட்டர் கார்லிக் காளான் எவ்வாறு செய்வது எனப் பார்ப்போம்.
image - skinny taste
தேவையான பொருட்கள்
காளான் - 600 கிராம்
உப்பில்லாத பட்டர்- 100 கிராம்
வெள்ளைப் பூண்டு - 1/4 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மிளகுத் தூள் - 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - கால் கப் (நறுக்கியது)
image - eatwell101
செய்முறை
முதலாவதாக, ஒரு கடாயில் பட்டர் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் வெட்டி வைத்த காளான், பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
அதன்பின்னர் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.
இறுதியாக காளான் பொன்னிறமாக வந்ததும் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து இறக்கினால் பட்டர் கார்லிக் காளான் ரெடி.
image - recepie for the regular homecook