61 வயதில் நீடா அம்பானியின் இளமைக்கு காரணம் என்ன? தினம் 1 மணிநேரம் இதை செய்ங்க
இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களும் ஒருவரான நீடா அம்பானி தன் இளமைக்கான காரணத்தை பெண்களுக்கு எடுத்துக்கூறியுள்ளார். இது ஆரோக்கியத்தையும் சீராக வைக்கிறது.
நீடா அம்பானியின் இளமை ரகசியம்
மார்ச் 8 உலக மகளீர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் நீடா அம்பானி தனது இளமை மற்றும் உடலை ஃபிட்டாக வைத்திருப்பதற்கான ரகசியம் குறித்து பேசியிருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நீடா அம்பானிக்கு, தற்போது 61 வயது ஆகிறது. ஆனால், அவரை பார்த்தால் அவ்வளவு வயதானவர் போலவே தெரியாது. இதற்கு காரணம் அவர் பின்பற்றும் டயட்டும், தினமும் செய்யும் உடற்பயிற்சிகளும்தான்.
பெண்கள் எப்போதும் தங்கள் உடலை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். குறிப்பாக 50-60 வயதில் இருப்பவர்கள் தங்கள் உடல் நலனில் கட்டாயம் கவனம் செலுத்துவது அவசியம்.
30 வயதுக்கு பின்னர் பெண்கள் 3-8 தசை வளர்ச்சிய 10 ஆண்டுக்கு ஒரு முறை இழக்கின்றனர் என்று கூறுகிறார். இதனால் மெட்டபாலிசம் குறைந்து உடலின் பலமும் குறையும் என்கிறார். இதற்கு உடற்பயிற்ச்சி மிகவும் அவசியம்.
நீடா அம்பானிக்கு கால்களுக்கு உடற்பயிற்ச்சி கொடுக்க மிகவும் பிடிக்குமாம். இவர், ஒரு பரதநாட்டிய கலைஞர். 6 வயதில் இருந்தே பரதத்திற்கு பயின்று நடனமாடி வருகிறார். இந்த காரணத்தினால் இவருடைய கால்கள் வலிமையாக இருப்பதாக அவர் கூறுகிறார்.
இவர் வாரத்திற்கு 5-6 நாட்கள் வரை உடற்பயிற்சி செய்வாராம். அழகான கட்டுக்கோப்புடன் வைக்க உதவுகிறது. இது தவிர தினமும் யோகா செய்வதும் இவரது வழக்கங்களுள் ஒன்று. ஒரு சில நாட்களில் இவர் நீச்சல் பயிற்சியையும் மேற்கொள்கிறார்.
அதே போல ஒரு மணி நேரம் நடனமாடுவதும் இவரது விருப்ப செயற்பாட்டில் ஒன்றாம். அப்படி இல்லை என்றால் ஒரு நாளைக்கு 5,000 முதல் 7,000 ஸ்டெப்ஸ் வரை நடப்பாராம். இவர் ஒரு சைவ பிரியர்.
இந்த காரணத்தினால் இவரது டயட் உணவில் அதிகமான இயற்கை உணவுகளை சேர்த்துக்கொள்வாராம். அதிலும் அதிகமான புரதச்சத்து எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம் என கூறுகிறார்.
சக்கரை இனிப்பை எப்போதும் இவர் தவிர்க்கிறாராம். இந்த உணவுகளை அவர் எடுப்பதே இல்லையாம். இதை எல்லாம் பண்ணுவதால் மட்டுமே 61 வயதிலும் அவரால் இவ்வளவு பிட்டாக இருக்க முடிகின்றது என நீடா அம்பானி கூறுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |