மோமோஸ் விற்றே 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்த இளைஞர்கள்
இந்திய மாநிலம், மேற்கு வங்கத்தின் தலைநகரான கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இருவர் மோமோஸ் விற்றே 2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து சேர்த்துள்ளனர்.
யார் இவர்கள்?
தற்போதைய காலத்தில் அனைவருக்கும் பிடித்த உணவாக மோமோஸ் இருக்கிறது. இதற்காக ஒரு தனி உணவு பிரியர்களே இருக்கின்றனர்.
இப்படிபட்ட உணவு நிறுவனத்தை உருவாக்கியவர்கள் தான் கொல்கத்தாவைச் சேர்ந்த நண்பர்கள் சாகர் தர்யாணி மற்றும் பினோத் குமார்.
இவர்கள் இருவரும் இணைந்து தான் வாவ் மோமோஸ் நிறுவனத்தை உருவாக்கினார்கள். கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் சாகர் தர்யாணி பட்டம் பெற்றார்.
பின்பு, இவரது பெற்றோர் மேற்படிப்பு படிக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். ஆனால், இவர் மோமோஸ் குறித்து ஐடியா சொல்லவே, அவரது பெற்றோர்கள் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரூ.30,000 முதலீடு
பின்னர், நண்பர்கள் இருவரும் பெற்றோர்களை சமாளித்து கடந்த 2018 ஆம் ஆண்டு ரூ.30,000 முதலீட்டில் சிறிய வாவ் மோமோஸ் கடையை திறந்தனர்.
அப்போது, இவர்களது கடையில், 2 பகுதி நேர சமையல்காரர்கள் மட்டும் இருந்தனர். மேலும், இவர்கள் முதல் 2 ஆண்டுகள் கடுமையான விளைவுகளை சந்தித்தனர்.
பின்பு, மோமோஸில் பல வகைகளை முயற்சி செய்து அதற்கான வரவேற்பை பெற்று கொல்கத்தாவில் பல கடைகளை திறந்தனர். ஆனால், இவர்களது முயற்சியால் தற்போது இந்தியா முழுவதும் 800 வாவ் மோமோஸ் கடைகள் உள்ளது.
ரூ.30,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த வாவ் மோமோஸ் கடையின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.2100 கோடி ரூபாய். ஒரு நாளுக்கு ரூ.6 லட்சம் மோமோஸ் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.