உலகின் மிக உயரமான புர்ஜ் கலிஃபா பற்றி இது தெரியுமா?
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடம் 828 மீட்டர் உயரம் கொண்டது.
மொத்தம் 160 மாடிகள் காணப்படுகின்ற போதிலும்125 வது மாடி வரை தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 122வது மாடியில் ஓட்டல் அமைந்துள்ளது.
இந்த கட்டிடத்தை 95 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தே முழுமையாக பார்க்க முடியும். இவ்வளவு பெரிய கட்டிடத்தை கட்டிக் கொண்டிருக்கும் காலத்தில் கட்டுமான பணியில் தினம்தோறும் 12 ஆயிரம் பேர் பணியாற்றியுள்ளனர்.
இவ்வளவு உயரமான இந்த கட்டிடத்தில் உள்ள லிப்ட் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் இயங்க கூடிய திறன் கொண்டது.
ஒரு நொடிக்கு Two Floors வரை செல்லக்கூடியது இந்த லிப்ட். அதேபோல இந்த கட்டிடத்தில் உள்ள பெரியளவிலான கண்ணாடி ஜன்னல்களை முழுவதுமாக ஒருவர் கிளீன் செய்ய முழுதாக மூன்று மாதங்கள் வரை தேவைப்படுகின்றதாம்.
தரைப்பகுதியில் உள்ள வெப்பநிலையை விட புர்ஜ் கலிபாவின் உச்சியில் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்குமாம்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் கட்டிடத்தை பார்க்க வேண்டுமென்றில் முன் கூட்டியே 3500 ரூபாய் கொடுத்து முன் பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல இந்த கட்டிடத்தின் சாதனையை முறியடிக்கும் வகையில் இதைவிட உயரமான கட்டிடத்தை இப்போது ஜாத்தா நகரில் கட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |