கழுத்தில் 80 ஆண்டுகளாக இருந்த துப்பாக்கி தோட்டா! எக்ஸ்ரேவில் கிடைத்த ஷாக்
80 ஆண்டுகளாக கழுத்தில் துப்பாக்கி குண்டுடன் நபர் வலம்வந்துள்ள சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.
சீன ராணுவ வீரருக்கு ஏற்பட்ட ஷாக்
சீனாவைச் சேர்ந்த ஜாவோ ஹீ(95) என்ற முதியவர் இரண்டாம் உலகப்போரில், ராணுவ வீரராக இருந்துள்ளார். இவர் 1950ம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவிற்கு எதிராக நடைபெற்ற போரில் கலந்து கொண்டு தற்போது ஓய்வு பெற்ற நிலையில், தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார்.
தற்போது வரை ஆரோக்கியமாக இருந்து வரும் இவரின் உடம்பிற்குள் 80 ஆண்டுகளாக துப்பாக்கி தோட்டா இருந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் இரண்டாம் உலகப்போரின் இறுதியின் போது ஜாவோவிற்கு கழுத்தில் காயம் ஏற்பட்டதை கவனிக்காமல் விட்டுள்ளார். ஆனால் இதனால் எந்தவொரு தொந்தரவும் இல்லாமல் தற்போது வரை ஆரோக்கியமாக இருக்கின்றார்.
இந்நிலையில் தற்போது எக்ஸ்ரேவில் ஜாவோவின் கழுத்தில் துப்பாக்கி தோட்டா இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இவை இருப்பது குறித்த நபருக்கே தெரியாமல் இருந்துள்ளது.
தற்போது அவர் கூறுகையில், 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாக இருக்கும் என்று கூறியுள்ள நிலையில், தற்போது குறித்த துப்பாக்கி தோட்டாவை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர்.