ஜூன் மாதத்தில் முதல் பெயர்ச்சி: முக்கியமான மூன்று ராசிக்காரர்களுக்கு இதுதான் பலன்
ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றமும் பெயர்ச்சியும் மிக முக்கியமானதாகும்.
ஒரு கிரகமானது ராசியை மாற்றும் போது அந்த மாற்றம் 12 ராசிகளிலும் காணலாம். இந்த கிரக மாற்றம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கின்றது.
அந்த வரிசையில் இந்த ஆண்டின் புதன் பெயர்ச்சியானது ஜூன் மாதம் 7ஆம் திகதி புதன் சுக்கிரன் மேஷ ராசியில் சஞ்சாரம் செய்திருக்கிறார் இதற்கு பின்பு அதிலிருந்து ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால்இந்த புதன் பெயர்ச்சியாக மாறுகிறது. இந்தப் பெயர்ச்சியில் 3 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கொடுக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியானது 9ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு அவர்களின் ஆளுமையில் அதிக மாற்றம் உண்டு. வியாபாரிகளுக்கு தொட்ட காரியம் எல்லாம் பொன்னாக கூடியதாக மாறும். இழுபறியில் அல்லது நிலுவையில் இருக்கும் வேலைகள் வெற்றிகரமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியானது 5ஆவது வீட்டிற்கு செல்கிறார். தொழிலிலும் பண ரீதியிலும் நல்ல மாற்றம் ஏற்படுபாடும். இழுபறியும் இருந்து வந்த நீதிமன்ற வழக்குகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிர்ஷ்டம் இந்தப் பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு பக்கம் இருக்கிறது. எடுக்கும் வேலைகளில் எல்லாம் வெற்றியை மட்டுமே பார்ப்பீர்கள். அதிக இலாபம் சம்பாதிப்பீர்கள். காதல் வாழ்க்கை கைகூடும்.
மீனம்
மீன ராசியானது 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். அதனால் வாகனம், சொத்து பத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். உங்கள் வெற்றிக்கு உங்கள் தாயின் ஆதரவு அதிகரிக்கும். பல வேலைவாய்ப்புகளை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் இருக்கும் நீங்கள் தேடி திரிந்த வேலைகளும் வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எப்போதும் வீரத்துடனும் தைரியத்துடன் இருக்க வேண்டும். உங்கள் ராசிக்காரர்களுக்கு தற்போது ஏழரை சனி நடந்துக் கொண்டிருப்பதால் சில விடயங்களில் கவனம் தேவை.