வெறும் 58 ரூபாயில் தினமும் 2 ஜிபி டேட்டா... அட்டகாசமான பிஎஸ்என்எல் ஆஃபர்
தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது பிஎஸ்என்எல் அதிரடியான திட்டத்தை அமல் படுத்தியுள்ளது.
தற்போது அசைக்க முடியாத நிறுவனமாக ஜியோ காணப்படுகின்றது. இதற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் நிற்கின்றது. ஆனாலும் ஜியோவின் திட்டத்தினை ஈடுகொடுக்க முடியாமலும் தவிக்கின்றது.
கலக்கும் 5ஜி சேவை
ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டிலிருந்து 5ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது. அதாவது 4ஜி டே்டாவிற்கு ரீசார்ஜ் செய்தால் அது வரம்பற்ற இணைய சேவையான 5ஜி-க்கு கொடுக்கப்படுகின்றது. 5ஜி சேவைக்கு என தனி ரீசார்ஜ் கிடையாது. இருப்பினும் இந்தாண்டில் 5ஜி சேவைக்கும் கட்டணம் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல்
இந்த இரண்டு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் இடையே பிஎஸ்என்எல்-ம் தனது சேவையை மக்களுக்கு வழங்கி வருகின்றது. ஆனால் 5 ஜி சேவையை வழங்கவில்லை என்றாலும் 4 ஜி சேவையை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வழங்கி வருகின்றது.
அந்த வகையில் 60 ரூபாய்க்கு டேட்டா ரீசார்ஜ் திட்டத்தினை கொடுத்துள்ளது. இதில் உங்களுக்கான ஒரு நாள் டேட்டா வரம்பு தீர்ந்துவிட்டால் இந்த திட்டத்தால் கிடைக்கும் டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தற்போதெல்லாம் காலிங், மெசேஜ் ஆகிய சேவைகளை விட வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவைதான் முக்கியமாக உள்ளது.
மீண்டும் பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு திட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அதாவது 58 ரூபாய் மற்றும் 59 ரூபாய் ரீசார்ஜ் திட்டமாகும்.
58 ரூபாய் ரீசார்ஜ் பிளான்
58 ரூபாய் ரீசாஜ் பிளானில் 7 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுவதுடன், தினமும் 2 ஜிபி டேட்டாவையும் கொடுக்கின்றது. மொத்தம் 7 நாட்களுக்கு 14 ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு நாளில் 2 ஜிபியை பயன்படுத்தி முடித்துவிட்டால் 40 kbps இணைய வேகமே கிடைக்கும். இதில் காலிங் மற்றும் மெசேஜிற்கான பயன்கள் இருக்காது. எனவே, இதற்கு அடிப்படையான திட்டம் தேவை.
59 ரூபாய் பிளானில் 7 ஜிபி டேட்டாவும், வரம்பற்ற காலிங் வசதியும் வழங்கப்படுகின்றது. ஆனால் மெசேஜ் வசதி கிடையாது. இதற்கு அடிப்படை பிளான் தேவையில்லை. தினமும் 1 ஜிபி டேட்டா வீதம் 7 ஜிபி கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |