வீட்டிற்கு சென்ற அண்ணன்: தனியாக இருந்த தங்கை செய்த காரியம்! கழுத்தை நெரித்து கொலை
தங்கை ஆண் நண்பருடன் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்ததால் ஆத்திரம் அடைந்த அண்ணன் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி கணபதி நகரைச் சேர்ந்தவர் முருகேசன். கூலித் தொழிலாளியான இவருக்கு சங்கிலியம்மாள் என்ற மாற்றுத்திறனாளி மனைவியும், கார்த்தி என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர்.
முருகேசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், மகன் கார்த்தி கட்டிட வேலைக்குச் சென்று குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு முருகேசனின் இளைய மகள் காயத்ரி (16) படுகாயங்களுடன் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது குரல்வளை நெரிக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறியதால் பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.
பொலிசாரின் விசாரணையில், சிறுமி காயத்ரி கடந்த சில நாட்களாக ஆண் நண்பர் ஒருவருடன் செல்போனில் பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காயத்ரியின் பெரியம்மா மகன் பாலமுருகன் என்பவர் காயத்ரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த காயத்ரி செல்போனில் நீண்ட நேரமாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பாலமுருகன் காயத்ரியை கண்டித்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் காயத்ரியின் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் மயங்கி கீழே விழுந்த காயத்ரியை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது பாலமுருகனை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் காயத்ரியை தாக்கும் பொழுது பாலமுருகன் மட்டும் தான் இருந்தாரா அல்லது அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனரா, சம்பவம் நடக்கும் போது காயத்ரியின் குடும்பத்தினர் எங்குச் சென்றிருந்தனர், காயத்ரியை திட்டமிட்டு ஆணவக்கொலை செய்தனரா என்று பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.