உயிருக்கு போராடிய தம்பியை நொடியில் காப்பாற்றிய அக்கா! என்ன செய்தார் தெரியுமா?
சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பி திடீரென உயிருக்கு போராடிய நிலையில், அக்கா சாமர்த்தியமாக காப்பாற்றிய காட்சி வைரலாகி வருகின்றது.
அமெரிக்காவில் மசாச்சுசெட் என்ற மாகாணத்தைச் சேர்ந்த அமலியா லவர்மே என்ற 12 வயது சிறுமி தனது தம்பியுடன் பள்ளியில் உணவருந்திக் கொண்டுள்ளார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக உணவு மூச்சுக்குழாய்குள் சென்றுள்ள நிலையில், மூச்சுவிட முடியாமல் குறித்த சிறுவன் துடிதுடித்துள்ளான்.
அக்கம் பக்கத்தில் இருந்த சிறுவர்கள் அனைவரும் எழுந்து தலைதெறிக்க ஓட, குறித்த சிறுவனின் அக்கா சாமர்த்தியமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
குறித்த சகோதரி தனது தம்பியை தூக்கி நன்றாக குலுக்கி அவரது மூச்சுக்குழாயில் அடைத்திருந்த உணவினை வெளியே வரவவைத்துள்ளார். குறித்த காட்சி பார்வையாளர்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.