புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது முதல் எடை குறைப்பு வரை: ப்ரோக்கோலி சூப்பின் அற்புத நன்மைகள்
பொதுவாகவே உலகெங்கிலும் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் உணவு பொருட்களின் பட்டியலில் ப்ரோக்கோலி முக்கிய இடம் வகிக்கின்றது.
முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சார்ந்த ப்ரோக்கோலியில் ஃபைபர், பொட்டாசியம், இரும்பு, காப்பர், ப்ரோட்டீன், கால்சியம் மற்றும் கே, சி, வைட்டமின்கள் ஆகியன செறிந்து காணப்படுகின்றது.
ப்ரோக்கோலியில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகதாக இருப்பதால் இவை உடவில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
அது மட்டுமன்றி இதில் காணப்படும் இந்தோல் -3 கார்பினோல் மற்றும் கெம்ப்ஃபெரோல் புற்றுநோயால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
குடல், ஈரல் சிறுநீர்ப்பை, மார்பகம் மற்றும் நுரையீரல்களில் ஏற்படும் புற்றுநோய்களை குணப்படுத்தும் ஆற்றல் ப்ரோக்கோலியில் அதிகம் இருக்கின்றது.
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தெரிவாக இருக்கும்.
அத்துடன் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக இருக்கிறது. இது வயிறு மற்றும் குடல்களில் சீராக செயற்பட்டு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகின்றது.
மேலும் ஆக்ஸிஜனேற்றிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பெரிதும் துணைப்புரிகின்றது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட ப்ரொக்கோலியை கொண்டு அனைவரும் விரும்பும் வகையில் அட்டகாசமான சுவையில் வீட்டிலேயே எவ்வாறு சூப் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ப்ரோக்கோலி - ஒரு கப்
பட்டர் - 1 கரண்டி
மிளகுத்தூள் -2 கரண்டி
சோள மாவு-1 கரண்டி
வெங்காயம் - 1
கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
துருவிய சீஸ் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ப்ரோக்கோலியின் தண்டு பகுதியை நீக்கிவிட்டு, சுத்தம் செய்து அதையும் சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் சோள மாவு , தண்ணீர் சேர்த்து நன்றான கரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் சிறிது வெண்ணெய் ஊற்றி உருகியதும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு லேசாக வதக்கிக்கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் 4 கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, அதனுடன் சோள மாவு கரைசலையும் சேர்த்து கைவிடாமல் கிளற வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள ப்ரக்கோலியையும் அதனுடன் சேர்த்து நன்றாக வேகவிட வேண்டும்.
ப்ரக்கோலி நன்றாக வெந்த பின்னர் அதனை தண்ணீர் இல்லாமல் எடுத்து, ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு 1 சுற்று அரைத்து மீண்டும் அதனை பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சூப் பதத்திற்கு கெட்டியானவுடன் கையளவு துருவிய சீஸ், மிளகுத்தூள் சேர்த்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதன் மேல் கொத்தமல்லி இலையை தூவினால் சுவையான ப்ரோக்கோலி சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |