மில்லியனில் ஒருத்தருக்கு தான் இப்படி நடக்கும்! வியக்க வைத்த அபூர்வ இரட்டை குழந்தைகள்
இளம்பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக்குழந்தைகள் பிறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரித்தானியா நாட்டிங்காம் என்னும் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணான Chantelle Broughton(29) என்பவருக்கு கடந்த நாட்களுக்கு முன்பு இரட்டை குழந்தை பிறந்துள்ளது.
அப்போது, அந்த இரட்டை குழந்தையை செவிலியர்கள் கையில் எடுக்கையில் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் மற்றும், ஒரு ஆண் என இரட்டை குழந்தைகள் கிடைத்த நிலையில், இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு நிறத்தில் இருந்துள்ளனர்.

Chantelle Broughton / BPM Media
அபூர்வ இரட்டை குழந்தைகள்
இதில், பெண் குழந்தைக்கு Azirah என்றும், ஆண் குழந்தைக்கு Ayon என்றும் Chantelle - Ashton தம்பதி பெயரிட்டுள்ளனர். இதில் வித்தியாசமான விடயம் என்ன என்றால், குழந்தை Ayon வெள்ளை நிறத்தில் பச்சை நிறக் கண்களுடனும், குழந்தை Azirah மாநிறத்தில் பழுப்பு நிற கண்களுடனும் உள்ளனர்.

இதற்கான காரண என்ன என பார்த்தால், Chantelle உடைய தாய் வழி தாத்தா ஒருவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர். அதேப்போல், அவரது கணவரான Ashton-னின் பெற்றோரில் ஒருவர் ஜமைக்கா நாட்டையும் மற்றொருவர் ஸ்காட்லாந்து நாட்டையும் சேர்ந்தவர்கள்.
இதனால் தான் அவர்களுக்கு இரட்டை குழந்தைகள் இரு வேறு நிறங்களில் பிறந்துள்ளது. அதுமட்டுமின்றி, இப்படி பிறக்கு இரட்டை குழந்தைகள் மில்லியனில் ஒருவருக்கும் மட்டுமே நடக்கும் அரிதான நிகழ்வு என கூறுகின்றனர்.

Chantelle Broughton / BPM Media
தாய் மகிழ்ச்சி
இதுகுறித்து பேசிய குழந்தையின் தாய், “இரட்டை குழந்தைகள் பிறந்து அடுத்த சில வாரங்களுக்கு எனது குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களால் கூட இதனை நம்ப முடியவில்லை.
அவர்களின் கண்கள் முதல் முடி வரை வித்தியாசமாக இருக்கிறது. அவர்களை நான் வெளியே கொண்டு செல்லும்போது பலரும் அவர்களை வியப்புடன் தான் பார்த்து செல்கின்றனர்” என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.