தக்காளி செடியில் கத்தரிக்காய் - சாத்தியமாக்கிய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம்
ஒரே செடியில் கத்தரிக்காய் மற்றும் தக்காளி என இரண்டையும் அறுவடை செய்யலாம் என்பதை காய்கறி ஆராய்ச்சி நிறுவனம் நிரூபித்துள்ளது.
ஒரே செடியில் கத்தரிக்காய் தக்காளி
வீட்டு தோட்டத்தில் ஒரெ இடத்தில் இரண்டு காய்கறிகள் வைக்கலாம் அதை அறுவடையும் செய்யலாம் என்றால் யாருக்குதான் பிடிக்காது.
இத்தகையதொரு அற்புதத்தை, 'பிரிமேட்டோ' (Brimato) என்னும் தனிச் செடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதை இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தின் வாரணாசியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சாத்தியமாக்கி உள்ளனர்.
எப்படி உருவாக்கபட்டது - கத்தரிக்காய் வேர்த்தண்டின் (rootstock) மீது தக்காளி ஒட்டுச் செடியை (scion) வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது 'பிரிமேட்டோ' செடி, எனப்படுகிறது.
இந்த பயிர்ச்செய்கை வீட்டுத் தோட்டக்காரர்கள், நகர்ப்புற விவசாயிகள் மற்றும் புதிய உணவுகளை விரும்புவோர் மத்தியில் ஒரு பயனுள்ள விடயமாக மாறும்.
இரட்டை ஒட்டு முறை - இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR) கூற்றுப்படி, இரட்டை அல்லது பல ஒட்டுச் சேர்க்கை என்பது ஒரு தொழில்நுட்பத் தேர்வாகும்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இளம் தளிர்களை ஒட்டுச் சேர்த்து, ஒரே செடியில் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட காய்கறிகளை அறுவடை செய்ய முடியும்.
IIVR இந்தத் தாவரத்தை 2017-ல் வெற்றிகரமாக உருவாக்கியிருந்தாலும், இன்னும் சில ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பிறகே விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்து, சமீபத்தில் ICAR-ல் பதிவு செய்தது.
இடத்தை சேமிக்கலாம் - பெரும்பாலான புதிய கண்டுபிடிப்புகளைப் போலவே இந்த கண்டுபிடிப்பும் மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. தக்காளிச் செடிகள் நீர்த்தேக்கத்திற்கு எதிராக மிகவும் பலவீனமானவை.
அதிக மழை பெய்தால் 24 மணி நேரம் கூட தாக்குப்பிடிக்காது. இந்த செடிகள் அதிக மழை நாட்களில் பாதிப்பிற்குள்ளாகும்.
விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிப்படி தக்காளி குடும்பத்தைச் சேர்ந்த கத்தரிக்காய் அதிக நீரைத் தாங்கும் வலிமை மிக்கதாகவும் உறுதியானதாகவும் இருப்பது தெரியவந்தது. அதுவே விஞ்ஞானிகளுக்கு ஒரு புதிய சிந்தனைக்கு வித்திட்டது.
பொமேட்டோ' மற்றும் 'பிரிமேட்டோ - பொமேட்டோ'ஒரு செடியில் 4 கிலோ தக்காளியும் 1 கிலோ உருளைக்கிழங்கும் விளைந்தது. எனினும், 'பிரிமேட்டோ' அதைவிட அதிக பலன்களை அளித்து, வீட்டுத் தோட்டக்காரர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இருப்பினும், இரண்டு காய்கறிகள் இணைந்திருப்பதால், இரண்டு குடும்பங்களின் பூச்சிகளுக்கும் இது இலக்காக நேரிடும். எனவே, விவசாயிகள் சரியான நேரத்தில் தலையிட்டு நல்ல மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம்.
குறைந்த இடத்தில் அதிக விளைச்சலை வழங்கும் இந்த 'பிரிமேட்டோ', வளர்ந்து வரும் நகர்ப்புற மக்களுக்கு நிச்சயம் ஒரு வரப்பிரசாதம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |