2 இட்லி அதிகமா சாப்பிடணுமா? கத்தரிக்காய், தக்காளி சட்னி இப்டி செய்து பாருங்க !
காலைநேரத்தில் மிகவும் அவசர அவசரமாக உணவு செய்யும் போது நாம் ஈஸியான ரெசிபியாக செய்வது சட்னி தான். இதை பொதுவாக தேங்காய் வைத்து செய்வார்கள்.
ஆனால் இன்று இந்த சட்னியை கத்தரிக்காய் மற்றும் தக்காளியை வைத்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடித்த வகையில் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 6
தக்காளி - 6
வரமிளகாய் - 5
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு - 3/4 டீஸ்பூன்
செய்யும் முறை
முதலில் கத்தரிக்காயை தண்டு நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு கொள்ள வேண்டும். இதன் பின்னர் வரமிளகாய் எடுத்து நெருப்பில் சுட்டு எடுத்து கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் தக்காளியை கழுவி இரண்டு துண்டாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் கத்திரிக்காய், வரமிளகாய், தக்காளி மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து, தக்காளியில் உள்ள தோலை உரித்தெடுக்க வேண்டும். இதன் பின்னர் இது எல்லாவற்றையும் மத்தினால் மசிக்க வேண்டும்.
இதை தாளிக்காமல் இட்லி, தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |