சுட சுட சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி! இதை மட்டும் சேர்த்தால் போதும்
பொதுவாக நமது வீடுகளில் பிரியாணி என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக பார்க்கப்படுகிறது.
திருமண நிகழ்வுகள், பாடசாலை நிகழ்வுகள், பண்டிகை என அனைத்து நிகழ்வுகளிலும் பிரியாணி என்ற உணவு இல்லாமல் இருக்காது.
இந்த பிரியாணியை காய்கறி பிரியாணி, மட்டன் பிரியாணி, கோழி பிரியாணி, மீன் பிரியாணி என பல்வகைகளில் சாப்பிட்டிருப்போம்.
யாராவது கத்தரிக்காய் பிரியாணி மாத்திரம் சாப்பிடுவது உண்டா? என கேட்டால் பதில் குறைவாகவே இருக்கும்.
அந்த வகையில் சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - ஒரு கப்
பிஞ்சுக் கத்திரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - ஒரு கப்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
புளித்தண்ணீர் - 2 கப்
தக்காளிச் சாறு - கால் கப்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம்- சிறிதளவு
அரைக்க தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் - 5
தனியா - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்

தயாரிப்பு முறை
முதலில் சின்னவெங்காயம், கொத்தமல்லி என்பவற்றை பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பின்னர் பிரியாணிக்கு தேவையான கத்திரிக்காயை காம்பு நீக்காமல் நான்கு பாகமாக வரும் படி வெட்டியெடுத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து பாசுமதி அரிசியை நீரில் 15 நிமிடம் ஊறவிட்டு நீரை மாத்திரம் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
ஒரு வாணலியில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடாகியதும் அரிசியை சில நிமிடங்கள் வறுத்து தெடுக்க வேண்டும். அதே வாணலியில் தேவையானளவு எண்ணெய் இட்டு அரைக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் சிறிதளவு உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
இதன் பின்னர் குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் போடு தாளித்து, வாசம் வரும் பொழுது வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறம் ஆகும் வரை அரைத்து கொள்ளவும் அதில் தக்காளி சாற்றையும் சேர்த்து வதக்கவும்.
இந்த கலவையினுள் வறுத்த பொடி, மஞ்சள்த்தூள் மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து கிளறி வெட்டிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.
அதில் புளித்தண்ணீர் ஊற்றி, ஒரு கொதிக்க விட்டு அரிசியை போட்டு மிதமான சூட்டில் வேகவிட்டு வெந்தும் கொத்தமல்லியை தழை தூவி இறக்கினால் சூப்பரான கத்தரிக்காய் பிரியாணி ரெடி.
