மட்டன் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்த புது மாப்பிள்ளை திடீர் மரணம்! கதறிய குடும்பத்தினர்கள்
பிரியாணி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாடு, காரைக்கால் தலத்தெரு காலணிபேட்டை சேர்ந்தவர் சந்திரமோகம் (30). கூலித்தொழிலாளி இவருக்கு மறுநாள் திருமணம் நடக்க இருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்திருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் சந்திரமோகனுக்கு விருந்து வைத்து மட்டன் பிரியாணி வழங்கியுள்ளனர். பிரியாணி சாப்பிட்ட அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளார்.
இதனால், அதிர்ந்துபோன உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்திரமோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இதுகுறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளை மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.