இன்ஸ்டாகிராமில் பில்டர் போட்டு புகைப்படம் போடுபவரா? ஆப்பு வைத்த அரசு
நார்வே நாட்டில் உள்ளவர்கள் புகைப்படங்களை எடிட் செய்து பதிவிடும்போது இது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என பதிவிடுவது கட்டாயம் என அந்நாட்டு அரசு ஒரு சட்டம் ஒன்றை கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளது.
நார்வே நாட்டில் உள்ள சில அழகு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களது மாடல் புகைப்படங்களை எடிட் செய்து அழகாக மாற்றி அதை வைத்து தங்கள் தயாரிப்புகளுக்கு விளம்பரம் செய்துள்ளனர்.
சிலர் அதை வாங்கி ஏமாந்து போயுள்ளனர்.குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இது அதிகம் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் குழந்தைகள் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரு புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.
அதன் படி சமூகவலைத்தளங்களில் வியாபாரத்திற்கான விளம்பர நோக்கில் புகைப்படம் பதிவிடப்படும்போது அது எடிட் செய்யப்பட்டிருந்தால் கட்டாயம் எடிட் செய்யப்பட்டது என லேபிள் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இது முக அழகு மாட்டுமல்லாமல் உடல் அமைப்பு, சைஸ், தோல் நிறம் என எதில் எடிட் செய்யப்பட்டாலும் அதற்கான லேபிளுடன் தான் பதிவிடவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பில்டர்கள் போட்டு புகைப்படம் எடுத்து அதை பதிவிட்டாலும் அதிலும் இந்த லேபிளை வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சாதாரண மக்கள் விளம்பர நோக்கம் இல்லாமல் அல்லது அந்த பதிவை வைத்து வர்த்தகம் செய்யும் எண்ணம் இல்லாதவர்களுக்கு இந்த லேபிள் தேவையில்லை. என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.