பூமியை சொர்க்கமாக காட்டும் 3 விடயங்கள்.. சாணக்கியர் சொல்வதை கேளுங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒரு சில மாற்றங்களை நாம் வாழ்க்கையில் கொண்டு வருவதன் மூலம் பூமியை சொர்க்கமாக மாற்றிக் கொள்ளலாம் என சாணக்கியர் கூறுகிறார். அப்படியாயின் என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சாணக்கியர் தத்துவங்கள்
1. நீங்கள் சிறுவயதில் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டும் என்றால் மகன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். பெற்றோர்களின் பேச்சை கேட்கும் மகன்கள் கிடைத்து விட்டால் பெற்றோர்கள் இந்த பூமியை சொர்க்கமாக பார்ப்பார்கள்.
2. கணவன்- மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்றால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். கணவன்- மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதை செய்ய வேண்டும். வீட்டில் அமைதி, குடும்பத்தில் நல்ல தொடர்பு, பரஸ்பரம் அனைத்தும் சரியாக கிடைக்கும்.
[X0NRTE
3. சாணக்கியர் கூற்றுப்படி தேவைகளுக்கு மாத்திரம் பொருள் வாங்கி வைப்பவர் மகிழ்ச்சியாக இருப்பார் எனக் கூறப்படுகிறது. மன நிம்மதியுடன் வாழ நினைப்பவர்கள் முதலில் அளவுக்கு அதிகமான ஆசைப்படுவதை நிறுத்த வேண்டும். பூமியை சொர்க்கமாக வைத்திருக்க நினைப்பவர்கள் தன்னை அடக்கி ஆள தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |